இயக்குனர்களிடம் கமல் தலையிடுவாரா? மணிரத்னம்கிட்ட அது பலிக்கலையே!
உலகநாயகன் கமல்ஹாசனைப் பொருத்தவரையில் தான் நடிக்கின்ற எல்லா படங்களிலும் ஒரு நடிகனாக மட்டும் அவரால் செயல்பட முடியாது. தான் நடிக்கின்ற அந்தப் படத்தை மெருகேற்றுவதற்காக தனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை எல்லாம் இயக்குனர்களிடம் பகிர்ந்து கொள்வார். அதுதான் அவரது வழக்கம். அதைத் தலையீடு என்று விமர்சிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அதைப்பற்றி கமலே ஒரு பேட்டியில் இப்படி சொல்லி இருக்கிறார்.
ஒரு செட்ல நான் நடிகனாக மட்டும் இருக்கணும்னா அந்தப் படத்தை இயக்குகின்ற இயக்குனர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நாயகன் படத்துக்காக நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடல் காட்சியை மணிரத்னம் படமாக்கிக் கொண்டு இருந்தார். அந்தப் பாடல் காட்சியிடையே ஜனகராஜ் எங்கிட்ட ஒரு சில்மிஷம் பண்ண நான் அவரைப் பார்த்து முறைப்பதாக ஒரு காட்சி. நான் அதுல நடித்து முடித்த உடனேஇ இந்த ரியாக்ஷன் வேணாம். நம்ம நாட்டுப் பாணியில ரியாக்ஷன் கொடுங்க.
நீங்க கொடுத்தது மேற்கத்திய பாணியில இருந்தது என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப சரியான விஷயம். அப்படி சொன்ன உடனே மீண்டும் அந்தக் காட்சியில் நான் நடித்த போது என்னுடைய முகபாவத்தை மாற்றிக் கொண்டேன். அந்த கணமே எனக்கு அவர் மீது முழுமையான நம்பிக்கை பிறந்தது. இந்தப் படத்தைப் பொருத்தவரைக்கும் நான் ஒரு நடிகனா மட்டும் இருந்தா போதும் என்பதை அன்றே முடிவு செய்து விட்டேன் என்று அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கமல்.
