அவ்ளோ விமர்சனம்... ஆனாலும் நடிகவேளை அப்படி பாராட்டிய பெருந்தலைவர்!

 
kamarajar, mr radha

நடிகவேள் எம்ஆர்.ராதா விமர்சனத்துக்கு ஆளாகாத ஆளுமைகளே இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு பலரோடு எம்ஆர்.ராதாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெருந்தலைவர் காமராஜரைக் கூட காரசாரமாக பல மேடைகளில் எம்ஆர்.ராதா விமர்சித்து இருக்கிறார். ஆனாலும் ஒருநாள் கூட காமராஜர் எம்ஆர்.ராதா மேல் கோபப்பட்டது இல்லை. ஏன்னா பல மேடைகளில் அவர் என்னைத் திட்டி இருக்கிறார்.

அவர் திட்டும்போது எல்லாம் அதுல நியாயம் இருக்கான்னு தான் நான் பார்ப்பேனே தவிர, அவர் மேல ஆத்திரப்பட மாட்டேன். அப்படி அவர் என்னைத் திட்டியதுக்கு அப்புறமும் என்னுடைய நட்பு தொடர்கிறது என்றால், அதுக்கு முக்கியமான காரணம், எம்ஆர்.ராதாவை நான் அந்தளவு மதிப்பதுதான். தமிழகத்தில் எம்ஆர்.ராதாவை விட சிறந்த நடிகர்னு யார் இருக்காங்க? மற்ற நடிகர்கள்கிட்ட பணம் இருக்கலாம்.

கூட்டம் இருக்கலாம். ஆனால் சிறந்த நடிகர்னா எம்ஆர்.ராதாவைத் தான் சொல்ல முடியும். மோசடி செய்யாதவர். திறமையாக நடிக்கக்கூடியவர் என்று ஒரு பேட்டியில் பெருந்தலைவர் காமராஜர் யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையிடம் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமலர் அவரிடம் எம்ஆர்.ராதாவுக்கு ஒரு பாராட்டு விழாவுக்கான ஏற்பாட்டைச் செய்யச் சொன்னார்.

அந்த விழாவில் எம்ஆர்.ராதாவுக்கு நான் பொன்னாடை போர்த்தினேன். நான் பல விழாக்களில் பலருக்கு பொன்னாடை போர்த்தியுள்ளேன். ஆனால் எம்ஆர்.ராதாவுக்கு நான் பொன்னாடை போர்த்தியபோது அடைந்த மகிழ்ச்சியை அப்போதெல்லாம் அடையவில்லை என்பதே உண்மை. நான் மனப்பூர்வமாகப் போர்த்திய பொன்னாடை அது என்று அந்தப் பதிவில் காமராஜர் குறிப்பிட்டுள்ளார். 

Tags

From Around the web