கண்ணதாசன் சொன்ன அந்த டைட்டில்...சந்தோசத்தில் துள்ளி குதித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில்  நடிப்பு பல்கலை கழகம் என்றால் சிவாஜிக்கு அடுத்து கமல்ஹாசனுக்கு தனி இடம் உண்டு. அவர் ஏற்காத வேடங்களே இல்லை
 
kannadasan

தமிழ் சினிமாவில்  நடிப்பு பல்கலை கழகம் என்றால் சிவாஜிக்கு அடுத்து கமல்ஹாசனுக்கு தனி இடம் உண்டு. அவர் ஏற்காத வேடங்களே இல்லை. இப்போது நடக்கும் சபவஙகளை தன் படத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறுவார். ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்பிரஸ் என அவரது புதிய முயற்சிகள் ஏராளம் உண்டு. 

கமல்ஹாசன் 100வது படம் ராஜபார்வை. தனது சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக  தயாரித்த அந்த படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைத்திருந்தார். 

rajaparvai

அந்த படத்திற்கு  ராஜபார்வை என்று பெயர் வைத்தது எப்படி தெரியுமா? அந்த படத்தின் பாடல்களை  இளையராஜா கம்போஸ் செய்துகொண்டிருந்தார். உடன் கமல்ஹாசனும்  இருந்தாராம். படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதினார். அப்போது இருவரும் இந்த படத்திற்கு தலைப்பு அமையவில்லை,  நீங்கள் ஏதாவது யோசனை சொல்லுங்களேன் என்று கண்ணதாசனிடம் கூறியுள்ளனர்.  உடனே கண்ணதாசன் ராஜ பார்வை என்று வையுங்கள் ஏனென்றால் கண் தெரியாதவந்தான் ராஜா மாதிரி  நடந்து சென்றுகொண்டிருப்பான் என்றாராம். இதனை கேட்ட இருவரும் அந்த டைட்டிலயே இறுதி செய்தார்களாம்.

From Around the web