கண்ணதாசன் செய்த மிகப்பெரிய உதவி… மறக்க முடியாமல் பாடகர் சொன்ன தகவல்!

 
கண்ணதாசன் செய்த மிகப்பெரிய உதவி… மறக்க முடியாமல் பாடகர் சொன்ன தகவல்!

பிரபல பின்னணிப் பாடகர் சீர்காழி கோவிந்தரராஜனின் திரை வாழ்க்கையிலும் சரி. சொந்த வாழ்க்கையிலும் சரி. கண்ணதாசனின் பங்கு மிக முக்கியமானது. அதுபற்றி சீர்காழி கோவிந்தராஜனே ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சீர்காழி கோவிந்தரராஜன் நடிகர் ஆனாருன்னா அதுக்கு முக்கியமான காரணம் கண்ணதாசன். அவருதான் நடராஜ தரிசனம் என்ற படத்தில் முதன் முதலாக சீர்காழி கோவிந்தரராஜனை நடிக்க வைத்தார். அந்தப் படம் வரலங்கறது வேற விஷயம். அதே மாதிரி சீர்காழி கோவிந்தரராஜனின் இல்லற வாழ்க்கையில் அவருக்கு நல்ல ஒரு துணை அமைவதற்கும் காரணமாக இருந்தவர் கண்ணதாசன். உளுந்தூர்பேட்டை சண்முகமும், கவிஞர் கண்ணதாசனும் நெருக்கமான நண்பர்கள்.

தன்னோட உறவுக்காரப் பெண்ணை சீர்காழி கோவிந்தர ராஜனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்கு முன்னால கவிஞர் கண்ணதாசனிடம்தான் யோசனை கேட்டுள்ளார் உளுந்தூர் பேட்டை சண்முகம். ''சீர்காழி கோவிந்தரராஜன் எப்படி? அவருக்குப் பொண்ணைக் கொடுக்கலாமா..?" என்று அவர் கேட்டபோது, ''ரொம்ப நல்ல பையன். உடனடியாக பொண்ணைக் கொடுங்க. நல்லபடியா பொண்ணை வைத்துக் காப்பாத்துவான்" என்று சீர்காழி கோவிந்தரராஜனுக்கு நற்சாட்சி பத்திரம் வழங்கியவர் கவிஞர் கண்ணதாசன்.

அதைத் தொடர்ந்து தான் அவர்களது திருமணம் நடைபெற்றது. என் வாழ்க்கையைப் பொருத்தவரை கவிஞர் கண்ணதாசன் மறக்க முடியாத நண்பர் என்று பல பத்திரிகைப் பேட்டிகளில் பதிவு செய்துள்ளார் சீர்காழி கோவிந்தரராஜன்.

From Around the web