சிவாஜி பாடலில் மட்டும் அவ்ளோ தத்துவம்... எல்லாத்துக்கும் காரணம் இதுதானா?

 
kannadasan, sivaji

கண்ணதாசன் எம்ஜிஆர், சிவாஜி உள்பட பலருக்கும் பாடல்கள் எழுதி உள்ளார். அவை எல்லாமே சூப்பர்ஹிட்கள் தான். அவரது பாடல்களின் வரிகள் எளிமையானவை. மிகவும் ரசிக்கும் வகையிலும், சிந்திக்கும் வகையிலும் இருக்கும். அதே நேரம் சிவாஜியின் பாடலில் மட்டும் அது காதல் பாடல் ஆனாலும் சரி. சோகப்பாடல் ஆனாலும் சரி. வாழ்ந்து காட்டி இருப்பார் கண்ணதாசன். வாழ்க்கையில் நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் விடை கொடுத்த வகையில் அவரது பாடல்கள் இருக்கும். காரணம் அனைத்தும் அவரது வாழ்க்கையோடு பொருந்தியவை. எப்படின்னு பாருங்க.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களில் சிவாஜியின் பாடலில் மட்டும் தத்துவங்கள் நிரம்பி வழியும். இதுக்கு என்ன காரணம்னா அவற்றில் பெரும்பாலான பாடல்கள் கண்ணதாசனின் வாழ்க்கையோடு பொருந்தியவை. வசந்த மாளிகையில் வரும் கலைமகள் கைப்பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ பாடல், மயக்கம் என்ன ஆகிய பாடல்களைச் சொல்லலாம். இந்தப் படத்தில் வரும் ஆனந்த் கதபாத்திரம் கூட கண்ணதாசனின் குணங்களுக்கு பொருந்தும் வண்ணம்தான் உள்ளன.

அதனால் இந்தப் படத்தில் வரும் அத்தனைப் பாடல்களும் தரமாக உள்ளன. அவன் தான் மனிதன் படத்தில் வரும் மனிதன் நினைப்பதுண்டு, பாலும் பழமும் படத்தில் வரும் போனால் போகட்டும் போடா, பார் மகளே பார் படத்தில் வரும் அவள் பறந்து போனாளே, புதிய பறவை படத்தில் வரும் எங்கே நிம்மதி, நிச்சய தாம்பூலம் படத்தில் வரும் படைத்தானே, குங்குமம் படத்தில் வரும் மயக்கம் எனது தாயகம், ஆண்டவன் கட்டளை படத்தில் வரும் ஆறு மனமே ஆறு, ஆலயமணி படத்தில் வரும் சட்டி சுட்டதடா, பாவ மன்னிப்பு படத்தில் எல்லோரும் கொண்டாடுவோம், வந்த நாள் முதல், பார்த்தால் பசி தீரும் படத்தில் உள்ளம் என்பது ஆமை ஆகிய பாடல் வரிகளை உற்று நோக்குங்கள். அத்தனையும் கண்ணதாசனின் வாழ்வியலோடு பொருந்தும் வண்ணம் இருக்கும். 

Tags

From Around the web