'பார்த்திபன் கனவு' கதையை கேட்டுட்டு ஹீரோயின் தான் பேர் வாங்குவாங்கன்னு சொன்ன ஶ்ரீகாந்த். ஆனா... இயக்குநர் கரு.பழனியப்பன் ஷேரிங்ஸ்!

 
Parthiban kanavu karu palaniappan

'ரோஜாக் கூட்டம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான ஶ்ரீகாந்த், அதன் பிறகு பல படங்களில் நடித்தார். இவர் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்டில் தான் 'பார்த்திபன் கனவு' படமும் இருக்கிறது.

இந்த படத்துக்கென மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதை இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் தான் இயக்கினார். இதில் ஶ்ரீகாந்துக்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார்.

இதனை T.G.தியாகராஜனின் 'சத்யஜோதி பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. சமீபத்தில், இயக்குநர் கரு.பழனியப்பன் கொடுத்த பேட்டியில் நடிகர் ஶ்ரீகாந்த் குறித்து பேசுகையில் "நான் 'பார்த்திபன் கனவு' படத்தோட முழு ஸ்கிரிப்ட்டை முடித்த பிறகு தயாரிப்பாளர் தியாகராஜன் சார், யாரை ஹீரோவா வச்சு பண்ணலாம்ன்னு கேட்டார்.

Parthiban kanavu

அப்போ நான் தான் 'ரோஜாக் கூட்டம், ஏப்ரல் மாதத்தில்' படங்கள்ல நடிச்ச ஶ்ரீகாந்தை வச்சு பண்ணலாம்ன்னு சொன்னேன். அவரும் ஓகேன்னு சொல்லிட்டார். ஶ்ரீகாந்த் முதலில் கதையை கேட்டுட்டு, நாளைக்கு பதில் சொல்றேன்னு சொன்னார்.

நான் உடனடியா சொல்லுங்கன்னு சொன்னேன். அப்புறம் அவர் சொன்னார், சார் இந்த கதை வந்து முழுக்க ஒரு பெண்ணை மையப்படுத்தி இருக்கு. என்னோட பார்ட் ரொம்ப குறைவா தான் இருக்கு. யார் இதுல கதாநாயகியா நடிக்கப்போறாங்களோ அவங்க தான் பேர் வாங்குவாங்க.

ஆனா, நான் இந்த படத்துல நடிக்கிறேன் சார். ஏன்னா, இந்த படம் ஓடும்ன்னு எனக்கு தோணுது சார். எனக்கு ஓடுற படம் ரொம்ப முக்கியம்ல சாருன்னு சொன்னார். அப்புறம் நான் தயாரிப்பாளர் தியாகராஜன் சார்கிட்ட, அவர் பண்றேன்னு சொல்லிட்டாருன்னு சொன்னேன். அவர் அடுத்த நாள் காலையிலேயே ஶ்ரீகாந்தை வரச் சொல்லி அட்வான்ஸ் கொடுத்துட்டார்" என்று கூறியுள்ளார்.

From Around the web