இவனை எங்க இருந்து புடுச்சீங்க... கமலை பார்த்து கேட்ட மனோரமா
இவனை எங்க இருந்து புடுச்சீங்க... கமலை பார்த்து கேட்ட மனோரமா
தமிழ் சினிமாவின் நடிப்பு பல்கலை கழகம் என்றால் சிவாஜிக்கு அடுத்து கமல்ஹாசன்தான். அவரது நடிப்பில் வந்த ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம் தசாவதாரம் போன்ற படங்கள் சிறு உதாரணம் மட்டுமே. தமிழ் சினிமாவில் அவர் ஏற்று நடிக்காத வேடங்களே கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஆச்சி மனோரமாவும் நடித்திருந்தார். அந்த படத்தில் கமல்ஹாசன் ஒரு வெள்ளைக்காரன் வேடத்தில் நடித்திருப்பார். அந்த வேடத்தில் நடித்தவர் கமல் என்றே அவ்ருக்கு தெரியாது. ஒருநாள் மனோரமா என்னிடம் தம்பி அந்த வெள்ளைக்கரன பார்த்தால் மட்டும் ரொம்ப பயமா இருக்கு. அவனை எங்கே இருந்து பிடித்துக் கொண்டு வந்தீர்கள் என கேட்டாங்க. அதுவும் கமல் சார்தான் என்று நான் சொன்னேன். அய்யய்யோ கமல் சாரானு சொல்லிவிட்டு அவர் அருகே சென்று நீயாப்பா என்று அழுதுட்டாங்க. யாருண்ணே தெரியத அளவிற்கு பண்றதுல கமல் சார் கில்லாடி என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறியிருந்தார்.
