எஸ்.ஏ.சி பண்ண வேலை!.. ரன் படத்துல விஜய் நடிக்க வேண்டியது!. லிங்குசாமி ஓப்பன்!...

 
run movie


லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்து 2002ம் வருடம் வெளியான திரைப்படம் ரன். இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். காதல் கலந்த ஆக்சன் படமாக வெளிவந்த ரன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்திருந்தார்.

இந்நிலையில்தான், 24 வருடங்கள் கழித்து வருகிற 10ம் தேதி இந்த படத்தை ரீ-ரீலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமிழகத்தில் பல தியேட்டர்களிலும் இந்த படம் மீண்டும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில்தான், ரன் படம் தொடர்பான ஒரு முக்கிய தகவலை லிங்குசாமி கூறியிருக்கிறார்.

இந்த படத்தின் கதையை எழுதும் போதே விஜய் சாரை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினேன்.. விஜய் சார் நடிக்க ஏவிஎம் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது/ விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கதையை கூறினேன். விஜய் சார் அப்போது தமிழன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.. விஜய் சாரை அரசியலுக்கு கொண்டு செல்லும் படியான கதை அது.

எனவே தற்போது மீண்டும் காதல் கலந்த ஆக்சன் படத்தில் நடித்தால் சரியாக இருக்காது என்று எஸ்.ஏ/சி சார் நினைத்தார். அதனால்தான் அந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. எனவே, மாதவனை வைத்து அந்த படத்தை இயக்கினேன்’ என கூறியிருக்கிறார்.

ஆனால் அப்படி வெளியான தமிழன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.. விஜய்க்கு அது ஒரு தோல்விப் படமாக அமைந்தது. அதேநேரம் மாதவனை வைத்து லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதனால் தனது முடிவை மாற்றிக்கொண்ட விஜய் உடனே காதல், ஆக்சன் கலந்த படமான கில்லி படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web