'ஆனந்தம்' ரிலீஸுக்கு பிறகு கமல் சாருக்காக கதை எழுதினேன்... மிஸ்ஸானதுக்கான காரணத்தை சொன்ன லிங்குசாமி!

 
Lingusamy kamal haasan

கூகுளில் தமிழில் வெளியான சிறந்த குடும்ப படங்கள் என்று தேடினாலே, அந்த லிஸ்டில் டாப் ஐந்து படங்களுக்குள் வந்து நிற்கும் படம் தான் 'ஆனந்தம்'. இது தான் இயக்குநர் லிங்குசாமிக்கு முதல் படம். 

இதில் ஹீரோவாக மம்மூட்டி நடிக்க, முக்கிய ரோல்களில் முரளி, அப்பாஸ், டெல்லி கணேஷ், சினேகா, ரம்பா, தேவயானி ஆகியோர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இதை ஆர்.பி.சௌத்ரியின் 'சூப்பர் குட் பிலிம்ஸ்' நிறுவனம் தான் தயாரித்திருந்தது. சமீபத்தில், இயக்குநர் லிங்குசாமி கொடுத்த பேட்டியில் "'ஆனந்தம்' எதிர்பார்த்த மாதிரியே சூப்பர் ஹிட்டாயிருச்சு. 

என்னோட அடுத்த படமும் சௌத்ரி சார் தயாரிப்பில் தான் பண்றதா இருந்துச்சு. அதுக்கு அவர் எனக்கு ரூ.5 லட்சம் அட்வான்ஸும் கொடுத்திருந்தார். அப்போ நான் 'உலக நாயகன்' கமல்ஹாசன் சாருக்காக ஒரு கதை பண்ணி சௌத்ரி சார்கிட்ட சொன்னேன். சாருக்கு கதையா ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

முழு ஸ்க்ரிப்ட்டும் பண்ணிட்டு சொல்லுயான்னு சொன்னார். அப்புறம் நான் முழு திரைக்கதையும் பண்ணி முடிச்சுட்டு அவர்கிட்ட போய் சொன்னேன். சௌத்ரி சார் கேட்டுட்டு, திருப்தியா இல்லன்னு சொல்லிட்டார். மறுபடியும் இன்னொரு கதை சொன்னேன், அதுவும் அவர் திருப்தியா இல்லன்னு சொல்லிட்டார்" என்று கூறியுள்ளார். 

From Around the web