பீமாவுக்காக நானா படேகர் சொன்ன க்ளைமேக்ஸ் - லிங்குசாமி!

 
Bheema

பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் லிங்குசாமி. இவருடைய இயக்கத்தில் 'சீயான்' விக்ரம் நடித்து 2008-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன படம் தான் 'பீமா'.

இதில் ஹீரோயினாக த்ரிஷாவும், முக்கிய ரோலில் பிரகாஷ் ராஜும் நடித்திருந்தனர். இது லிங்குசாமிக்கு தோல்விப் படமாக அமைந்தது.

Bheema

சமீபத்தில், லிங்குசாமி கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசும்போது "'பீமா'-வோட தோல்விக்கு எல்லாருமே சொன்னது க்ளைமேக்ஸ் தான். ஆயுதத்தை எடுத்தவன் ஆயுதத்தால தான் சாவாங்குற பழமொழி உள்ள போய் அதை வச்சு தான் விக்ரம், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் எல்லாருமே கடைசில சாகுற மாதிரி க்ளைமேக்ஸ் பண்ணியிருந்தேன்.

முதல்ல நான் பிரகாஷ் ராஜ் கேரக்டர்ல நடிக்க பாலிவுட் நடிகர் நானா படேகர் சாரை தான் யோசிச்சேன். அவர்கிட்ட போய் கதை சொல்லி ஓகேவும் பண்ணிட்டேன். அவர் அப்போ 1 கோடி சம்பளம் கேட்டதால தான் கமிட் பண்ணல.

Nana Patekar

நானா படேகர் சார் கதை கேட்டுட்டு, அவர் ஒரு சூப்பரான க்ளைமேக்ஸ் சொன்னாரு. அதை வச்சிருந்தா, கண்டிப்பா படம் ஓடியிருக்கும். நான் அந்த டைம்ல அதையும் வைக்காம மிஸ் பண்ணிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

From Around the web