'மாநகரம்'-க்கு பிறகு நான் பண்ணனும்ன்னு நினைச்ச படம் 'கைதி' இல்ல... உண்மையை போட்டுடைத்த லோகேஷ் கனகராஜ்!

 
Lokesh kanagaraj maanagaram kaithi

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஃபிலிம்மேக்கிங் ஸ்டைலை வைத்திருப்பவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். சின்ன பட்ஜெட்டில் இவர் இயக்கிய முதல் படமான 'மாநகரம்'-ல் ஶ்ரீ, சந்தீப் கிஷன் நடித்திருந்தார்கள். 

இப்படம் ஹிட்டாக, அடுத்து ஒரு நாள் இரவில் நடக்கும் கதையான 'கைதி' தான் இவருக்கு இரண்டாவது படம். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் கார்த்தி - நரேன் இணைந்து நடித்திருந்தனர்.

இதையடுத்து விஜய் - கமல் - ரஜினியுடன் சேர்ந்து 'மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி' என படிப்படியாக லோகேஷ் கனகராஜ் தொட்ட உயரம் மிகப் பெரியது.

சமீபத்தில், லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டியில் "நான் 'மாநகரம்' பண்ணி முடிச்ச பிறகு, என்கிட்ட காலேஜ் எலக்சன் மையமா வச்சு ஒரு கதை இருந்துச்சு. என்னோட ரெண்டாவது படமா நான் அதை தான் பண்ணனும்ன்னு நினைச்சேன்.

அதுல 'மாநகரம்'-ல நடிச்ச ஶ்ரீ, சந்தீப் கிஷன் & 'உறியடி' விஜய் குமார் நடிக்குறதா இருந்துச்சு. அது நடக்குற மாதிரி போய் நடக்காம போயிருச்சு. அதுக்கப்புறம் தான் நான் 'கைதி'-ல கமிட்டாகி அது என்னோட ரெண்டாவது படமாயிருச்சு" என்று கூறியுள்ளார்.

From Around the web