மம்முட்டி, குஷ்புவோட ஃபிட்னஸ் சீக்ரெட்... அட மாஸா இருக்கே!
நடிகர் மம்முட்டி மற்றும் குஷ்பு. இவர்களை எடுத்துக்கொண்டால் வயதைக் கண்டுபிடிக்கவே முடியாது. அவ்ளோ அழகா, இளமையா இருப்பாங்க. இதுல குஷ்பு கூட ஒரு கட்டத்துல குண்டாக இருந்தார். இப்போ ஸ்லிம்மா அழகாகி விட்டார். சரி. இவங்களோட இளமையின் ரகசியம் என்னவா இருக்கும்? வாங்க அவங்களே என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.
முதல்ல மம்முட்டி என்ன சொல்றாருன்னு பாருங்க. பிடிச்சதெல்லாம் சாப்பிடுவேன். ஆனா பிடிச்ச அளவுக்கு சாப்பிடுவேன் என்கிறார் மம்முட்டி. தனது கைவிரல்களால் ஒரு பிட்டு எடுத்து இவ்ளோதான் அந்த பிடிச்ச அளவுன்னு சொல்லிக் காட்டுகிறார். அதன்பிறகு தான் அந்த ஆங்கருக்கே அவர் சொன்னதன் அர்த்தம் புரிந்தது.
நாம பசிக்குத் தான் சாப்பிடுறோம். ருசிக்கு சாப்பிடல. பெரிய தட்டு தேவை இல்லை. சின்ன தட்டு போதும். ஜப்பானிஸ் கொஞ்சமாகத் தான் சாப்பிடுவோம். சின்ன கிண்ணத்துல தான் சாப்பிடுவாங்க. அதுதான் அவங்க உடம்புக்குத் தேவை. அப்படித்தான் எனக்குன்னு சின்ன தட்டு வச்சிருக்கேன். அதுல தான் நான் சாப்பிடுவேன்.
பெரிய தட்டுல சாப்பாடு வச்சி என்ன எல்லாம் காலியாகாம இருக்குன்னு சொல்வாங்க. அதுக்காக சின்ன தட்டு தான் எனக்கு வீட்ல சாப்பிட வச்சிருக்கேன். புரதச்சத்துள்ள உணவு தான் அதிகமா சாப்பிடுவேன். உணவைக் குறைச்சிட்டேன். ஒர்க் அவுட் பண்றேன். அதுதான் என் ஃபிட்னஸோட சீக்ரெட் என்கிறார் குஷ்பு.
