எல்லாரும் வொர்க் அவுட் பண்ணுவாங்க!. மணிரத்னம் பீர் அனுப்புவாரு!.. ஜெயராம் ஓப்பன்..

 
jayaram


மலையாள நடிகராக இருந்தாலும் தமிழில் நிறைய படங்களில் நடித்திருப்பவர் ஜெயராம். அதுவும் கடந்த பல வருடங்களாகவே தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 30 வருடங்களுக்கு மேல் சென்னையில்தான் குடும்பத்துடன் வசித்து வருகிறார். துவக்கத்தில் ஹீரோவாக நடித்தவர் ஒரு கட்டத்தில் காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். தற்போது தொடர்ந்து வில்லனாகவும் ஜெயராம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்த ஜெயராம் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்..

jayaram

கல்கி நாவலில் ஆழ்வார்க்கடியான் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அது அந்த நாவலை படித்தவர்களுக்கு தெரியும். சிறுவயதில் ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரம் பற்றி எனது அம்மா என்னிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் படத்தில் எல்லாவற்றையும் காட்ட முடியவில்லை.  ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்திற்கு தொப்பை இருக்கும். எனவே, எனக்கு தொப்பை வரவேண்டும் என்பதற்காக தினமும் ஷூட்டிங் முடிந்தவுடன் எனது அறைக்கு 10 பீர் பாட்டிலை அனுப்புவார். அந்த பக்கம் மற்ற நடிகர்கள் எல்லாம் கத்தி கத்தி உடற்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். நானோ அதை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஜாலியாக பீர் குடித்துக் கொண்டிருப்பேன். அப்படி இருந்தும் தொப்பை அதிகமாக வரவில்லை..

தினமும் காலை சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்றதும் என் வயிற்றை மணிரத்தினம் பார்ப்பார்.. இன்னும் கொஞ்சம் தொப்பை வந்தா  இருக்கும்.. நல்லா சாப்பிடுங்க.. நிறைய பீர் குடிங்க’ என்று சொல்லுவார்’ என்று சொல்லியிருக்கிறார்.

Tags

From Around the web