கமலிடம் மட்டும் அப்படி சொல்லிவிட்டு... மணிரத்னம் செய்த தரமான சம்பவம்!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வசூல் சாதனையை செய்த பொன்னியின் செல்வன் படத்தை முதல் முதலாக திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று விரும்பியவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவரது நாடோடி மன்னன் திரைப்படம் ஓடிக்கொண்டு இருக்கும்போதே எம்ஜிஆருடைய அடுத்த திரைப்படம் பொன்னியின் செல்வன் என்று பத்திரிகைகளில் வெளியிட்டார் எம்ஜிஆர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைப் பொருத்தவரையில் அதில் வந்தியத்தேவன் தான் கதாநாயகன். பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் அருண்மொழி வர்மாவின் கதாபாத்திரம் அந்தக் கதையில் மிகவும் குறைவாகவே இருந்தது.
அதனால் தான் அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய இரு கதாபாத்திரங்களிலும் தானே நடிப்பது என முடிவேடுத்தார். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைப்பில் உருவாக இருந்த அந்தப் படத்தை எம்ஜிஆரால் எளிதில் தொடங்க முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் அந்தக் கதையில் பல கதாபாத்திரங்கள் இடம்பெற்று இருந்தது. பொன்னியின் செல்வன் கதையைப் பொருத்தவரையில் அதைப் படமாக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கு இருந்தாலும், அவர்களால அதை எல்லாம் செய்ய முடியலன்னா அதற்கு காரணம் எம்ஜிஆரிடம் அந்தக் கதையோட உரிமை இருந்ததுதான்.
அதற்குப் பின்னால் ஒருகாலகட்டத்தில் கல்கியின் எல்லா படைப்புகளும் நாட்டுடமை ஆக்கப்பட்டதற்குப் பின்னால் தான் நாம் ஏன் படமாக்கக்கூடாது என்ற எண்ணம் கமலுக்கு ஏற்பட்டது. அந்தக் கதையை சுருக்க முடியாது என்று நினைத்த தால்தான் அந்தப் படத்தைத் தயாரிப்பதைக் கைவிட்டு விட்டார். அப்போது மணிரத்னத்திடமும் அதைப் பற்றி கலந்து ஆலோசித்தார்.
அவருக்கும் ஏறக்குறைய அதே கருத்து தான் இருந்தது. அப்படிப்பட்ட எண்ணத்தில் இருந்த மணிரத்னம் அதற்குப் பின்னால் மனம் மாறி உருவாக்கியதுதான் பொன்னியின் செல்வன் படைப்பு. அந்தப் படம் எந்தளவுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தது என்பதும், மணிரத்னத்துக்கு எப்பேர்ப்பட்ட பெயரைப் பெற்றுத் தந்தது என்பது நாம் அறிந்த விஷயம்.
