மன்னர் படங்களில் இருந்து பேன்ட் சர்ட்டுக்கு மாறிய எம்ஜிஆர்... அட இவருதான் காரணமா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் மிகுந்த மரியாதை வைத்து இருந்த ஒரு இசை அமைப்பாளர் எஸ்எம்.சுப்பையா நாயுடு. நாடோடி மன்னன் உள்பட எம்ஜிஆருடைய பல படங்களுக்கு இசை அமைத்த பெருமை அவருக்கு உண்டு. அவர் சொன்னாருன்னா பெரும்பாலும் எம்ஜிஆர் தட்ட மாட்டார். அந்தளவுக்கு அவர் மீது பாசமும், மரியாதையும் வைத்து இருந்தார் எம்ஜிஆர். ஒருமுறை காரில் பயணிக்கும்போது, உங்க நடிப்பைப் பற்றி கொஞ்சம் பேசலாமா என்று எம்ஜிஆரிடம் கேட்டார் எஸ்எம்.சுப்பையா நாயுடு.
பேசுங்க. உங்களுக்கு இல்லாத உரிமையா என்றார் எம்ஜிஆர். நடிக்கிற விஷயத்தில் உங்களை முழுசா மாத்திக்கணும் என்ற எஸ்எம்.சுப்பையா நாயுடுவை ஆச்சரியத்துடன் பார்த்தார் எம்ஜிஆர். நடிப்புன்னு நான் சொல்றது உங்களுடைய நடிப்பு பாணிய மட்டும் இல்லை. உங்களுடைய உடைகளையும் நீங்க மாத்திக்கணும். அப்படின்னு நான் சொல்ல வர்றேன். உங்களைப் பொருத்தவரைக்கும் தொடர்ந்து சரித்திர படங்கள்ல தான் நடிச்சிட்டு இருக்கீங்க.
இப்ப தமிழ் சினிமா உலகமே சமூக படங்களுக்கு மாறிக்கிட்டு இருக்கு. அப்படி இருக்கும்போது நீங்களும் பேன்ட் ஷர்ட் போட்டு நடிச்சாதானே நல்லா இருக்கும். மலைக்கள்ளன் படத்துல ரஹீம் பாயா நடிச்சீங்க. ரொம்ப நல்லா இருந்தது. பணக்காரன் படத்துல பேன்ட் ஷர்ட் போட்டு நடிச்சீங்க. ரொம்ப அழகா இருந்தது. அப்படி இருக்கும்போது உங்களுக்கு அப்படி நடிக்குறதுல என்ன தயக்கம் என்று எஸ்எம்.சுப்பையா நாயுடு கேட்டார். எம்ஜிஆரைப் பொருத்தவரையில் பேன்ட் ஷர்ட் போட்டு நடிக்கிறதுல ஒரு தயக்கம் இருந்தது என்பதுதான் உண்மை.
எஸ்எம்.சுப்பையா நாயுடு அப்படி பேசியதுக்கு பின்னால எம்ஜிஆருக்கு வந்த ஒரு பட வாய்ப்பு தான் சபாஷ் மாப்பிள்ளை. அந்தப் படத்துல பேன்ட் ஷர்ட் போட்டுத்தான் எம்ஜிஆர் நடித்தார். ஆனால், அப்படி உடை அணிந்து நடிப்பதிலே எம்ஜிஆருக்கு ஒருவிதமான கூச்சம் இருந்தது. அதனால்தான் அந்த படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பை தமிழில் வச்சுக்காம அந்த படத் தயாரிப்பாளரான மாலினி பம்பாயிலே வைத்துக் கொண்டார். பல படங்களில் பேன்ட் ஷர்ட் போட்டு நடிச்சிருந்தாலும் அப்படிப்பட்ட உடையிலே அவர் நடிச்சிருந்தாலும், அப்படிப்பட்ட உடையிலே அவருக்கு வெற்றியைத் தேடித் தந்த படங்கள்னா அது தேவர் பிலிம்ஸ் படங்கள் தான். அந்த படத்துக்குப் பின்னால எம்ஜிஆர் உடை அணிந்து நடித்த எல்லா திரைப்படங்களும் வெற்றி பெற்றன.
எம்ஜிஆர் பேன்ட் ஷர்ட்டுக்கு மாற வேண்டும் என்பது கண்ணதாசன், சின்ன அண்ணாமலை உள்பட பல பேரோட விருப்பம். அப்படி இல்லன்னாலும் அதில் மிக முக்கியமான பங்குக்குச் சொந்தக்காரர் இசை அமைப்பாளர் எஸ்எம்.சுப்பையா நாயுடு தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
