பாட்ஷா நான் டைரக்ட் பண்ணவேண்டிய படம்!.. மனோபாலா கொடுத்த பேட்டி...

 
baasha

நடிகர் ரஜினிகாந்தின் சினிமா கெரியரில் அவருக்கு முக்கிய படமாக அமைந்தது பாட்ஷா. ஏற்கனவே பல ஆக்சன் படங்களில் நடித்திருந்தாலும் பாட்ஷா திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முக்கிய படமாக அமைந்தது. பாட்ஷா திரைப்படம் ரஜினிகாந்தை ஒரு பக்கா ஆக்சன் ஹீரோவாக மாற்றியது.

ஆரம்பம் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை சுரேஸ் கிருஷ்ணா இயக்கி இருந்தார் பாட்ஷா திரைப்படம் 195 ஆம் வருடம் ஜனவரி மாதம் 12ஆம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. பொதுவாக ரஜினியை ரசிக்காதவர்களும், பிடிக்காதவர்களும் கூட பாட்ஷா படத்தை ரசித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மற்றும் பின்னணி இசை அனைத்தும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இயக்குனரும், காமெடி வேடத்தில் பல படங்களிலும் நடித்தவருமான மறைந்த மனோபாலா பல மாதங்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றில் பேசியபோது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்

பாட்ஷா படத்திற்கு முதலில் நான்தான் இயக்குனர். ஆர்.எம்.வி சார் என்னிடம் பேசியிருந்தார். நான்தான் அந்த படத்தை இயக்க வேண்டியது. ஆனால் பாலச்சந்தர் சார் அவரது உதவியாளர் சுரேஷ் கிருஷ்ணாவே இந்த படத்தை இயக்கட்டும் என ரஜினியிடம் கூறிவிட்டார். ரஜினியும் அதற்கு சம்மதித்துவிட்டார். ரஜினியை வைத்து ஊர்க்காவலன் படத்தை இயக்கியிருக்கிறேன். பாட்ஷா படத்திற்கு டைரக்டரை மாற்றி விட்டதால் கோபமடைந்து நேராக ரஜினியின் வீட்டிற்கே போய்விட்டேன்.

‘என்னை ஏன் படத்திலிருந்து தூக்குனீங்க? ஊர்க்காவலன் படத்தை நான் சரியாக இயக்க வில்லையா?’ என்று கேட்டேன். அதைக்கேட்டு பதறிய ரஜினி ‘நீங்கள்தான் இயக்குனர் என எனக்கு தெரியாது.. பாலச்சந்தர் சார் கூறியதால் சுரேஷ் கிருஷ்ணா இயக்குனர் என முடிவு செய்துவிட்டோம். உங்களை இயக்குனராக போட்டதே எனக்கு தெரியாது.. சாரி’ என்று கூறினார்’ என சொல்லியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5205 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web