மனோரமாவைக் கண்டுக்காமல் இருந்த திரை உலகம்..! ரஜினி கொடுத்த அந்த வாய்ப்பு...!

 
rajni, manorama

ஆயிரம் திரை கண்ட ஆச்சி என்று தமிழ்த்திரை உலகில் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் மனோரமா. இவர் திரையில் காமெடி, குணச்சித்திரம் என எந்த வேடம் கொடுத்தாலும் பின்னிப் பெடல் எடுப்பார். என்ன ஒரு நடிப்பு என்று சிவாஜியே அவரைப் பார்த்து பயப்படுவாராம். அவர் உடன் இணைந்து நடித்தால் அதற்காக தனியாக ஒர்க் அவுட் செய்து பார்ப்பாராம். அந்தளவு நடிப்புல புலியாக இருந்தவர்தான் மனோரமா. இவரைப் பற்றி ஒரு ஆச்சரிய தகவலைப் பார்க்கலாமா... 

ஆச்சி மனோரமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக இருந்தாங்கன்னு சொல்றாங்களே. இது உண்மையான்னு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆச்சி மனோரமா சூப்பர்ஸ்டாருக்கு எதிராக இருந்தாங்கன்னு சொல்ல முடியாது. அதிமுக மேடையிலே ஒருமுறை பிரச்சாரம் செய்யும்போது ரஜினிகாந்தைப் பற்றி தவறான கருத்தை வெளியிட்டார். அப்படி பேசியதன் காரணமாக அவருக்கு பல படவாய்ப்புகள் கைநழுவிப் போனது.

அதில் இருந்து மீண்டு வந்தார் என்றால் அதற்கு காரணமும் ரஜினிகாந்த் தான். தன்னைப் பற்றி தவறாக பேசியதை எல்லாம் அவர் மனதில் வைத்துக்கொள்ளாமல் அருணாச்சலம் படத்தில் நடிக்கிற வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தார். அதன்காரணமாகத்தான் திரும்பவும் சினிமா உலகிலே மனோரமாவால் ஒரு ரவுண்டு வர முடிந்தது என்கிறார் சித்ரா லட்சுமணன். 

sankaran v
sankaran v

3113 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web