முதல்வரான பிறகு எம்ஜிஆர் படம் நடித்தாரா? இளையராஜா இசையா?

 
mgr, ilaiyaraja

நமக்கெல்லாம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த கடைசி படம்னா அது மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் என்று தான் தெரியும். அதன்பிறகு அண்ணா நீ என் தெய்வம் என்ற படத்தில் நடிக்க அது பாதியில் நின்று போனது. அந்த காட்சிகளை எடுத்து பாக்கியராஜ் தனது அவசர போலீஸ் 100 படத்தில் இணைத்தார் என்பது நாம் அறிந்த விஷயம்.

எம்ஜிஆர் முதல்வரான பிறகும் படத்தில் நடித்தாரா என்று சிலருக்கு கேள்வி எழுவதுண்டு. அதற்கு பதில் என்னன்னு இந்த பிரபலம் சொல்கிறார். வாங்க என்ன விவரம்னு பார்க்கலாம்.

எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு ஏதாவது படடத்துல நடிச்சிருக்காரான்னு ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு முத்தாய்ப்பாக பதில் சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். வாங்க என்னன்னு பார்க்கலாம். எம்ஜிஆர் முதல்வரான பிறகு, கே.சங்கர் இயக்கத்திலும், இளையராஜாவின் இசையிலும் உன்னை விட மாட்டேன் என்ற ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தார்.

அதற்கான தொடக்க விழாவும் நடைபெற்றது. இளையராஜாவின் இசையிலே ஒரு பாடலும் பதிவு செய்யப்பட்டது. அதற்குப் பின்னால் மத்திய அரசாங்கத்தில் எழுந்த ஒரு சில எதிர்ப்பு காரணமாக அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார் எம்ஜிஆர். 

Tags

From Around the web