அந்த விஷயத்துல எம்ஜிஆர்லாம் இல்ல... சிவாஜி தான்...! மெல்லிசை மன்னரே இது நியாயமா?

 
mgr, msv, sivaji

எம்எஸ்.விஸ்வநாதன் அதிகமா மியூசிக் பண்ணது எம்ஜிஆர் படங்களுக்கா இல்ல சிவாஜி படங்களுக்கா என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இதுக்கு பதிலை சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். வாங்க பார்க்கலாம். 

எம்ஜிஆர், சிவாஜி இருவரில் எம்எஸ்.விஸ்வநாதன் அதிகமாக இசை அமைத்ததுன்னா அது சிவாஜியோட படங்களுக்குத்தான். அதுக்கு காரணம் அவரோட படங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. சிவாஜி மொத்தம் 280 படங்களில் நடித்துள்ளார். அதுல 90 படங்களுக்கு மெல்லிசை மன்னர் தான் இசை அமைத்துள்ளார். எம்ஜிஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 146. இதுல 49 படங்களுக்கு எம்எஸ்.வி. இசை அமைத்துள்ளார். 

எம்ஜிஆரோடு இணைந்து எம்எஸ்.வி. பணியாற்றிய முதல் படம் ஜெனோவா. அவர் பணியாற்றிய கடைசி படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். இந்த ரெண்டு படங்களுக்கு பின்னாலும் ஒரு செய்தி இருக்கு. எம்எஸ்.வி. இசை அமைத்த முதல் படம் ஜெனோவா. அதே மாதிரி பார்த்தீங்கன்னா மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் தான் முதல் அமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னாலே எம்ஜிஆர் நடித்த கடைசி படம். 

sankaran v
sankaran v

3116 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web