ஜெயலலிதா தான் எனக்கு வில்லி... தயாரிப்பாளரிடம் பிடிவாதம் பிடித்த எம்ஜிஆர்!
எம்ஜிஆர் தலையீட்டால் தோல்வியைத் தழுவிய படம் குறித்த தகவல்
சத்யா மூவீஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த படங்களிலேயே மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படம்னா கண்ணன் என் காதலன் படம் தான். அப்படி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் எம்ஜிஆரின் தலையீடு தான்
எம்ஜிஆரின் நாடக மன்றத்திலும் அவரது திரைப்பட நிறுவனத்திலும் நிர்வாகியாக இருந்தவரும், எம்ஜிஆரின் அமைச்சரவையில் இருந்தவருமான ஆர்எம்.வீரப்பன் எம்ஜிஆரை வைத்து 6 திரைப்படங்களைத் தயாரித்து இருக்கிறார். அதுல 4 வது திரைப்படம் கண்ணன் ஒரு காதலன். சத்யா மூவீஸ் எம்ஜிஆரை வைத்து எடுத்த படங்களிலேயே மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய படம்னா கண்ணன் என் காதலன் படம் தான். அப்படி தோல்வியைத் தழுவியதற்குக் காரணம் எம்ஜிஆரின் தலையீடு தான் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஆர்எம்.வீரப்பன்.
அந்தப் படத்தைப் பொருத்தவரை 2 கதாநாயகிகள். அதுல ஒரு கதாநாயகியை எம்ஜிஆர் விரும்புவார். இன்னொரு கதாநாயகி எம்ஜிஆரை விரும்புகின்றவர். எம்ஜிஆர் வேறு பெண்ணை விரும்புகிறார் என்று தெரிந்ததும் தான் நொண்டியாக ஆகிவிட்டதைப் போல நடித்து நாடகமாடி அந்தக் கதாநாயகனுடைய அன்பையும், கருணையையும் பெற்று அவனைத் திருமணம் செய்து கொள்வது போன்ற கதாபாத்திரம். எம்ஜிஆரை ஏமாற்றுகின்ற கதாபாத்திரத்துல ஜெயலலிதா நடிச்சா சரியா இருக்காதுன்னு நினைச்ச ஆர்எம்.வீரப்பன், எம்ஜிஆர் விரும்புகின்ற கதாநாயகி வேடத்துல ஜெயலலிதாவை நடிக்க வைத்தார்.
அந்த வேடத்துக்கு வாணிஸ்ரீ என்ற நடிகையை நடிக்க வைத்தார். வாணிஸ்ரீ அப்போதுதான் திரையுலகில் வளர்ந்து கொண்டு இருந்த ஒரு புதுமுகம். வாணிஸ்ரீ நடித்தா தான் அந்தக் கதாபாத்திரம் சிறப்பாக அமையும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது. ஆனால் கதையைக் கேட்ட ஜெயலலிதாவோ வாணிஸ்ரீ என்ன கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தாரோ அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினார். அப்படிப்பட்ட தன்னோட கருத்தை எம்ஜிஆரிடமும் வலியுறுத்தி இருக்கிறார். அப்படி அவர் வலியுறுத்தியதன் காரணமாக அந்தக் கதாபாத்திரத்தில் அம்மு நடிக்கட்டும். அவங்க நடிச்சா தான் சரியா இருக்கும் என்றார் ஜெயலலிதா.
உங்களோட பல படங்கள்ல ஜெயலலிதா ஜோடியா நடிச்சிருக்காங்க. அதனால அவங்க அந்தக் கதாபாத்திரத்துல நடிச்சா சரியா வராதுன்னு ஆர்எம்.வீரப்பன் பலமுறை எம்ஜிஆரிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்தக் கதாபாத்துக்குத் தான் படத்துல நடிப்பதற்குக் கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு அம்மு பலமுறை எங்கிட்ட சொல்லிருக்காங்க. அவங்களும் விரும்புறாங்க. அதனால அவரே நடிக்கட்டும் என்றாராம் எம்ஜிஆர்.
அந்த முடிவை மட்டும் அன்று நான் ஏற்றுக் கொள்ளாம இருந்துருந்தா நிச்சயமாகக் கண்ணன் என் காதலன் வெற்றிப்படமாக அமைந்து இருக்கும். அந்த முடிவை நான் ஒத்துக்கொண்டதால்தான் அந்தப் படம் வெற்றிப்படமாக அமையவில்லை என்று தன்னோட கருத்தை பத்திரிகைப் பேட்டி ஒன்றில் ஆர்எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
