எம்ஜிஆரிடம் நிருபர் கேட்ட குதர்க்கமான கேள்வி... தடாலடியாய் வந்த பதில்!
திராவிட முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட போதிலும் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற கொள்கையை எல்லாம் நான் எந்தக் காலத்திலும் கடைபிடித்தது இல்லை என்று எம்ஜிஆர் பலமுறை பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். அப்படி இருந்தும் பத்திரிகை நிருபர் ஒருவர் கோவில் சம்பந்தமான காட்சிகளில் எல்லாம் நீங்கள் நடிப்பதே இல்லையே என்று எம்ஜிஆரிடம் ஒருமுறை கேட்டார். அப்படி எல்லாம் எனக்கு எந்தக் கொள்கையும் கிடையாது.
எதனால இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று தெரியல. காஞ்சித்தலைவன் படத்தில் நான் கோவிலுக்குப் போவதைப் போலவும், வருவதைப் போலவும் மட்டும் காட்சிகள் இருக்கும். கோவிலுக்குள் இருப்பதைப் போல காட்சிகள் இருக்காது. அதை மனதில் வைத்துத்தான் நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு உள்ளே நாங்க போக முடியவில்லை. அதனாலதான் அப்படிப்பட்ட காட்சியை வைக்கல.
அதை மனதில் வைத்துக்கொண்டு தான் இந்தக் கேள்வியை நீங்க கேட்குறீங்கன்னு நினைக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகமோ, நானோ கோவிலுக்குப் போகக்கூடாது என்றோ, கடவுளைக் கும்பிடக்கூடாது என்றோ எந்தக் கால கட்டத்திலும் சொன்னது இல்லை. கடவுளின் பெயரால் நடக்கின்ற அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும்தான் நாங்க எதிர்த்துப் போராடினோம். கடவுள் எதிர்ப்புக் கொள்கையைப் பின்பற்றுவனாக இருந்தால் ஜெனோவா படத்திலும், பரமபிதா படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பேனா?
இது எல்லாத்தையும் தாண்டி இன்னொரு விஷயத்தையும் நான் உங்களுக்குப் பதிவு பண்ணனும்னு நினைக்கிறேன். மருதமலை கோவிலுக்குப் போய் விளக்கேற்றி வைத்துவிட்டு வந்தவன் நான். கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அந்தக் காரியத்தை செய்திருப்பேனா என்று அந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து பதில் கேள்வி கேட்டவர்தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
