கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்னு சும்மாவா சொன்னாங்க? எம்ஜிஆருக்கு பொருந்தும் அந்த சம்பவம்!

 
mgr helped poor

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கொண்டாடின ஒரே பண்டிகை பொங்கல் தான். அதைத் தவிர வேறு எந்த ஒரு பண்டிகையையும் எம்ஜிஆர் கொண்டாடியதே இல்லை. இப்போது ராயப்பேட்டையில் அதிமுக அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் தான் எம்ஜிஆரின் நாடக மன்றமும் அந்த காலத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அந்த இடத்தில்தான் பொங்கல் திருவிழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவது எம்ஜிஆரின் வழக்கம். பொங்கல் திருநாள் அன்று தன்னை பார்க்க வருகின்ற அனைவருக்கும் பரிசு பொருள்கள், வேட்டிகள், புடவைகள் கொடுப்பது எம்ஜிஆரின் வழக்கம்.

இதுக்கான பரிசு பொருள்கள் எல்லாம் பொங்கலுக்கு ஒரு நாள் முன்னதாகவே லாரியில் அங்கு வந்து இறங்கி விடும். அனைத்து புடவைகளும், வேட்டிகளும் ஒரே தரத்திலும், ஒரே விலையிலும் இருக்குமாறு எம்ஜிஆர் பார்த்துக் கொள்வார். அதுல ரொம்ப கவனம் செலுத்துவார். பொங்கல் தினத்தன்று எம்ஜிஆர் அந்த இடத்துக்கு வந்த உடனே அந்த இடம் களைகட்டி விடும். அப்படி ஒரு உற்சாகம் அங்கே இருக்கின்ற எல்லோரையும் தொற்றிக் கொள்ளும்.

எம்ஜிஆருடைய மனைவிகளான சதானந்தவதி, விஎன்.ஜானகி, எம்ஜிஆரின் சகோதரரான எம்ஜி.சக்கரபாணி ஆகியோர் அந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். தன்னுடைய கைகளாலேயே எம்ஜிஆர் பரிசு பொருள்களைக் கொடுப்பார். கொடுத்து சிவந்த கரங்கள் அப்படின்னு எம்ஜிஆருடைய கரங்களைப் பற்றி பலர் சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்போம். அந்த விமர்சனம் எவ்வளவு நியாயமானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

பொங்கல் விழாவில் பரிசைப் பெற்ற ஒருவர் எம்ஜிஆரைப் பற்றி குறிப்பிடும்போது, எம்ஜிஆர் இந்த பொங்கல் தவிர வேறு எந்த பண்டிகையையும் கொண்டாடுறது இல்லை. அவர் மட்டும் ஆண்டு முழுவதும் எல்லா பண்டிகையையும் கொண்டாடுனார்னா எங்களோட வாழ்க்கை எப்படி இருந்துருக்கும்னு நினைச்சுப் பார்க்கும்போதே ஆனந்தமாக இருக்கிறது என்கிறார். 

sankaran v
sankaran v

3117 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web