விஜயகாந்த் வேணாம்!. நீயே நடி!.. நம்பிக்கை கொடுத்த எம்.ஜி.ஆர்!.. அவரச போலீஸ் உருவான கதை!..
எம்.ஜி.ஆர் சில நாட்கள் நடித்து ஒரு திரைப்படம் நிறுத்தப்பட்டது. அதன் பின் பல வருடங்கள் கழித்து பாக்யராஜ் அந்த படத்தில் இடம் பெற்ற காட்சிகளுக்கு பொருந்துவது போல ஒரு கதையை எழுதி இயக்கி நடித்தார். அவசர போலீஸ் 100 என்கிற தலைப்பில் அந்த படம் 1990ம் வருடம் அக்டோபர் மாதம் 17ம் தேதி வெளியானது.
இந்நிலையில், இந்த படம் தொடர்பாக ஒரு முக்கிய தகவலை மறைந்த இயக்குனர் பாக்யராஜ் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படம் அப்படியே நின்றுபோய்விட்டது. அவர் முதலமைச்சரானதால் படத்தில் தொடர்ந்து அவரால் நடிக்க முடியவில்லை. அந்த தயாரிப்பாளர் எனக்கு பல லட்சம் செலவு என புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர் நடித்த எந்த படமும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்ததில்லை. எனவே அந்த படத்தை நான் போய் பார்த்துவிட்டு அந்த தயாரிப்பாளரிடம் ‘இதில் உள்ள காட்சிகளை சேர்ப்பது போல நான் ஏதாவது செய்கிறேன்.. விஜயகாந்த் போன்ற நடிகரை வைத்து ஆக்ஷன் படமாக எடுக்கலாம்’ என சொல்லிவிட்டு வந்து விட்டேன்.. இந்த தகவல் எம்.ஜி.ஆருக்கு போய்விட்டது.. என்னை வர சொன்னார்..

அவரை பார்க்கப்போனேன். ‘அவரிடம் நீ என்ன சொன்ன?’ என்று கேட்டார்.. ‘இல்ல நீங்க நடிச்ச படம் சும்மா கிடக்கக்கூடாது.. அதான் அதைவச்சி ஏதாவது முயற்சி பண்ணலாம்னு பார்த்தேன்.. விஜயகாந்தை ஹீரோவா போட்டு இந்த படத்தை எடுக்கலாம்’ என்று சொன்னேன்.
அதற்கு ‘ஏன் நீ இதில் நடிக்க மாட்டியா?’ என்று கேட்டார்.. ‘இல்ல இது ஆக்ஷன் கதை.. இப்ப விஜயகாந்துக்கு நல்ல மார்கெட் இருக்கு’ என்று சொன்னேன். அதற்கு ‘தூரல் நின்னு போச்சு படத்தில் நீ ஆக்ஷன் பண்ணலயா?.. இந்த படத்துல நீயே நடி. இல்லனா அத தூக்கி குப்பையில போடு.. அது என்ன நஷ்டமோ தயாரிப்பாளருக்கு நான் கொடுத்துடுறேன்’ என்று சொன்னார். அவர் அவ்வளவு நம்பிக்கையாக சொன்னதும் அந்த முயற்சியில் நான் இறங்கினேன்.. அப்படி வெளியான படம்தான் அவசர போலீஸ் 100’ என கூறியிருக்கிறார்.
