எம்ஜிஆர் படத்தைத் தவறாகக் கணித்த விநியோகஸ்தர்... அடிச்சித் தூள் கிளப்பிய அந்தப் படம்!

 
urimaikural mgr

தமிழ்சினிமா உலகிலே திரைப்படங்களின் வெற்றியைக் கணிக்க பல விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அதே நேரம் அப்படி கணிக்க முடியாத விநியோகஸ்தர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு விநியோகஸ்தரைப் பற்றி இப்போது பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் சொல்கிறார். என்னன்னு பாருங்க. 

சிவாஜியை வைத்துப் பல வெற்றிப்படங்களை தந்த இயக்குனர் ஸ்ரீதர் எம்ஜிஆரைக் கதாநாயகனாக நடிக்க வைத்து எடுத்த படம் தான் உரிமைக்குரல். இந்தப் படத்தின் கோவை உரிமை எனக்குத் தான் வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு வாங்கியவர் ஒரு விநியோகஸ்தர். அவர் பெயர் மரைக்காயர். அந்த சமயத்தில் ஸ்ரீதருக்கும், எம்ஜிஆருக்கும் எப்படி செட்டாகும்? இந்தப் படம் எப்படி வெற்றியாகும்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சாங்க. மரைக்காயருக்கு ஒண்ணுமே புரியல.

இந்தப் படத்தை யாருக்காவது கொடுத்துடலாமான்னு கூட யோசித்தார். அவரும் விற்க எவ்வளவோ முயற்சி பண்ணினார். ஆனால் அவரால விற்க முடியல. இதற்கிடையில் படத்தின் வெளியீட்டுத் தேதி குறிக்கப்பட்டது. படமும் வெளியாகி விட்டது. வெளியான நாளின் முதல் ஷோவில் இருந்தே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி. விநியோகஸ்தர்களுக்கு எல்லாம் லாபத்தை அள்ளிக் கொடுத்தது. எம்ஜிஆர் ரசிகர்கள் அச்சு அசலாக எம்ஜிஆர் படம் என்று கொண்டாடினர்.

இன்னொரு பக்கம் ஸ்ரீதர் ரசிகர்கள் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காமல் எடுத்து இருக்கிறார் என்று கொண்டாடினர். இப்படி இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடுகின்ற படமாக அமைந்ததால தான் அது இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பின்னால நல்ல காலம் இந்தப் படத்தை யாரும் வாங்கல. வாங்கிருந்தாங்கன்னா ஒரு மிகப்பெரிய லாபத்தை இழந்து இருப்பேன் என்று பல நண்பர்களிடமும் சொல்லி இருக்கிறார் மரைக்காயர்

Tags

From Around the web