படங்களுக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டுவது எப்படி? தயாரிப்பாளர் சொன்ன அபூர்வ தகவல்!

 
mgr

அந்தக் காலத்தில் படத்தின் பெயரே கதை எப்படி என்று சொல்லி விடும். படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டும். அந்தளவுக்கு ஒரு ஈர்ப்புடன் இருக்கும். ஆனால் இன்று வரும் படங்களில் பெரும்பாலானவை ஆங்கிலத் தலைப்புகள் தான். அடிப்படைக் கருத்தை ஒட்டியும் அந்தத் தலைப்புகள் அமைவதில்லை. அந்த விஷயத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தனி ரகம் தான். அவரது படங்ளுக்கு அவர் தான் பெயர் சூட்டுவாராம். எப்படின்னு பார்க்கலாமா...

புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பொருத்தவரைக்கும் அவர் நடிக்கின்ற திரைப்படங்களின் கதை, பாடல்கள் மட்டும் இல்லாம படத்தின் தலைப்பிலும் மிகுந்த கவனம் செலுத்தினார். அவர் படங்களுக்குப் பெயர் சூட்டும் விதத்தைப் பற்றிச் சொல்ல வருகிற போது தன்னுடைய படங்கள் சொல்ல வருகின்ற அடிப்படைக் கருத்தை உணர்த்தி, மக்களிடம் அதைக்கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலே அவர் கொண்டு போய் சேர்ப்பார் என்று அவர் பெயர் வைக்கிற திறமையைப் பற்றிப் பல பத்திரிகைப் பேட்டியில் பதிவு செய்துள்ளார் ஏவிஎம்.சரவணன்.

உதாரணமாக அவரது படங்கள் பலவற்றின் பெயரைச் சொல்லலாம். நீதிக்குத் தலைவணங்கு, நீதிக்குப் பின் பாசம், தாய் சொல்லைத் தட்டாதே, தாய்க்குப் பின் தாரம், தர்மம் தலைகாக்கும், அன்னமிட்ட கை, ஊருக்கு உழைப்பவன், சிரித்து வாழ வேண்டும், இன்று போல் என்றும் வாழ்க, நாளை நமதே, பெற்றால் தான் பிள்ளையா?, திருடாதே என்று தான் சொல்ல நினைக்கிற கருத்துகளையே படங்களுக்குப் பெயராகச் சூட்டியவர்தான் எம்ஜிஆர். அவர் தன் திரைப்படங்களுக்கு சூட்டிய அந்த அழகான பெயர்களைப் போல இப்போ எந்தப் படத்திலாவது பார்க்க முடிகிறதா? 

Tags

From Around the web