கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர், அதிரடி வில்லனுக்கு வாள் சண்டை கற்றுக்கொடுத்த எம்ஜிஆர்..! அட அவரா?
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த படங்களில் அதிரடி வில்லனாக நடித்தவர் பிஎஸ்.வீரப்பா. ஒரு வில்லனாக மிகப்பெரிய அளவிலே பிஎஸ்.வீரப்பா பெயரைப் பெற்றார் என்றால் அதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒண்ணு அவரது வசன உச்சரிப்பு. மிக அழகாக தமிழ் வசனங்களைப் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவராக அவர் இருந்தார்.
அடுத்து சண்டைக்காட்சியில் அந்தளவுக்கு சுறுசுறுப்பாக நடிப்பார். அதிலும் குறிப்பாக வாள் சண்டைக்காட்சின்னா கேட்கவே வேண்டாம். அந்த வாள் சண்டைக்காட்சிகளில் எல்லாம் நடிப்பதற்கு பிஎஸ்.வீரப்பாவுக்கு பயிற்சி கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். சீத்தாகரணம் என்ற படத்தில் எம்ஜிஆர் இந்திரஜித்தாக நடித்தார். நான் இந்திரனாக நடித்தேன்.
அப்போ எனக்கு வாள் சண்டை எல்லாம் அவ்வளவாக தெரியாது. அந்தப் படத்தில் நடிக்கும்போது எனக்கு வாள் சண்டையை முறையாகக் கற்றுக்கொடுத்தவர் எம்ஜிஆர். அந்த வகையில் எம்ஜிஆர் எனக்கு சக நடிகர் மட்டுமல்ல. குருவும் கூட. அவர்கிட்ட வாள் சண்டையைக் கற்றுக்கொண்டதற்குப் பின்னால் ஸ்டண்ட் சோமுகிட்ட நான் கூடுதலாக பயிற்சி பெற்றேன் என்று ஒரு பேட்டியில் பிஎஸ்.வீரப்பா பதிவு செய்துள்ளார்.
