மகேந்திரனிடம் எம்ஜிஆர் சொன்ன விஷயம்... பெரிய இயக்குனராக இதுதான் காரணமா?
கதாசிரியரும், இயக்குனருமான மகேந்திரன் மக்கள் திலகம் எம்ஜிஆருக்காக எழுதியதுதான் அனாதையில் என்ற நாடகம். அந்த நாடகத்தை என்றைக்கு திருச்சியில் அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாரோ அதற்கு முதல் நாள் தான் கனமழை. மறுநாள் திருச்சி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில அனாதையில் நாடகத்தை நடத்த முடியாது என்றதால், நாடகக்கலைஞர்கள் எல்லோரும் சென்னைக்குத் திரும்பி விட்டார்கள்.
தன்னோட முதல் நாடகமே அரங்கேற்ற முடியலயே என்ற வருத்தம் மகேந்திரனுக்கு நிச்சயமாக இருந்தது. அதைத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் மகேந்திரனை தன்னுடைய இல்லத்துக்கு அழைத்தார். இந்த நாடகத்தை அரங்கேற்றலையேன்னு கவலைப்படாதீங்க. நிச்சயமாக இந்த நாடகம் ஒருநாள் அரங்கேறும். அதுக்கு முன்னால நீங்க சினிமாத் தொழிலில் பயிற்சி பெற வேண்டும் என்று நான் விரும்புறேன். அடுத்து காஞ்சித்தலைவன் என்கிற படத்தில் நான் நடிக்க இருக்கேன்.
அந்த படத்தை டைரக்ட் பண்ணப் போறவர் ஏ.காசிலிங்கம் ஜெயக்குமார். அவரைப் பொருத்தவரைக்கும் மெத்தப் படித்தவர். அது மட்டுமல்லாமல், உலக சினிமாவில் நல்ல ஞானம் உண்டு. அவருக்கிட்ட உதவி இயக்குனராக நீங்க கொஞ்சம் பணியாற்றினால் நல்ல சினிமாவைப் பற்றிய அறிவு இன்னும் விசாலமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு என்று சொல்லி அந்தப் படத்தில் உதவி இயக்குனராக மகேந்திரனை சேர்த்து விட்டார் எம்ஜிஆர். பின்னாளில் ஒரு கதை வசனகர்த்தாவாகவும், இயக்குனராகவும் மகேந்திரன் மிகப்பெரிய இடத்தைத் தொட்டார் என்றால் அதற்கு விதைப் போட்டது புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
