எம்ஜிஆருக்கு சினிமாவுல ஒண்ணுமே தெரில... இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்!
எம்ஜிஆருக்கு சினிமாவோட தொழில் நுணுக்கங்கள் எதுவும் தெரியலன்னு யாராவது சொன்னா நம்ப முடியுமா? ஆனால் அப்படி சொன்ன இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் தான் எல்லீஸ் ஆர்.டங்கன். ஜெமினி ஸ்டூடியோ அதிபரான எஸ்எஸ்.வாசனுக்கும், எம்ஜிஆருக்கும், எனக்கும் முதல் படம்னா அது சதிலீலாவதிதான். அந்தப் படத்தில் பணியாற்றும்போது எம்ஜிஆருக்கு சினிமாவில் தொழில்நுணுக்கம் எதுவுமே தெரியாமல் இருந்தது அப்படிங்கறதுதான் உண்மை.
நாடகத்துல சத்தம் போட்டு சத்தம்போட்டு பேசி நடிக்கிறதால சினிமாவிலும் கூச்சல் போட்டே பேசி நடித்துக் கொண்டு இருந்தார் அவர். ஆவேசத்தோடு பேசும்போதெல்லாம் அவரது நடிப்பும் கொஞ்சம் மிகையாகத்தான் இருக்கும். சினிமாவைப் பொருத்தவரைக்கும் இந்தளவுக்கு மிகையாக நடிக்கத் தேவையில்லை.
கொஞ்சம் இயல்பா நடிங்கன்னு அவரது நடிப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக நான் குறைச்சேன். அப்படிப்பட்ட அவர் பின்னாளில் தமிழ்சினிமாவில் எப்படிப்பட்ட உயரத்தை அடைந்தார் என்பது நாம் அறிந்த விஷயம். அவர் புருக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரை சந்திக்க நான் ஆசைப்பட்டேன். ஆனால் அது நிறைவேறவில்லை என்று எல்லீஸ் ஆர்.டங்கன் ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார்.
