நல்லகாலம் எம்ஜிஆர் படிக்கல... இல்லன்னா அப்படி ஒரு தரமான சம்பவம் நடந்துருக்குமா?

 
MGR 2

பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குகிற திட்டத்தை விரிவாக்கியதில் மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு பெரிய பங்கு உண்டு. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை முதல்வரானதுக்குப் பிறகு எம்ஜிஆர் கொண்டு வந்தார் என்றாலும் அப்படி ஒரு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதற்கான விதை அவரது நாடகக் காலத்திலே விழுந்தது என்பதுதான் உண்மை. இன்பக்கனவு என்ற பெயரில் எம்ஜிஆர் நாடக மன்றத்தின் சார்பாக எம்ஜிஆர் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டு இருந்தார்.

அந்த நாடகத்தில் எம்ஜிஆர் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு சாக்லேட் கொடுப்பதைப் போல ஒரு காட்சி. அவர் சாக்லேட் கொடுக்கின்ற நேரத்திலே அவரது சகோதரி படிப்புதான் சொல்லித் தரீங்களே. போதாதா? சாக்லேட் வேறு கொடுக்க வேண்டுமா என்று கேட்க, எங்கிட்ட வசதி இல்லை. வசதி மட்டும் இருந்தா சாக்லேட் இல்ல. சாப்பாடே போடுவேன் என்று ஒரு வசனம் பேசி இருப்பார் எம்ஜிஆர்.

அன்று அந்த நாடகத்திலே எம்ஜிஆர் பேசிய அந்த வசனம் தான் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்ததற்குப் பின்னாலே அவரால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. சின்ன வயசுல சாப்பிடுறதுக்கு வசதி இல்லாததனால தான் என்னால பள்ளிக்குப் போய் படிக்க முடியல. அன்னைக்கு மட்டும் அந்த வசதி இருந்தா நிச்சயமா நான் அன்னைக்கு பள்ளிக்கு போய் படித்து இருப்பேன் என்று பல பேட்டிகளில் எம்ஜிஆர் சொல்லி இருக்கிறார். பள்ளியில படிக்கலையே அப்படிங்கற வருத்தம் எம்ஜிஆருக்கு இருந்தாலும் நம்மைப் பொருத்தவரைக்கும் நல்ல காலம் அவர் படிக்கல அப்படின்னுதான் தோணுது.

அவர் பள்ளிக்குச் சென்று படித்து இருந்தார் என்றால் நிச்சயமாக நாடகக் குழுவில் சேர்ந்து இருக்க மாட்டார். நாடகக் குழுவில் சேராமல் இருந்து இருந்தால் நடிகராக ஆகி இருக்க மாட்டார். ஒரு நடிகராகவும், நாடாள்பவராகவும் எம்ஜிஆர் எப்படிப்பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர் என்பது நாம் அறிந்த விஷயம். அப்படிப்பட்ட சாதனைகளை அவர் செய்வதற்கு அடித்தளமிட்டது அவருடைய அந்த நாடக மேடை பயிற்சி தான். அதனால அவர் படிக்காம இருந்ததுல நமக்கு சந்தோஷம் தான் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன். 
 

sankaran v
sankaran v

3109 Articles

Sankaran is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and old cinema storiees

Tags

From Around the web