கறி இல்லையா? - மேனேஜரை அடி வெளுத்த விஜயகாந்த்

 
கறி இல்லையா? - மேனேஜரை அடி வெளுத்த விஜயகாந்த்

விஜயகாந்த் என்றாலே எலோருக்கும் முதலில் நினைவில் வருவது சாப்பாடுதான். படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே சாப்பாடு என்பது அவரது நிலைபாடு. தான் என்ன சாப்பிடுகிறோமோ அதனைதான் அனைவரும் சாப்பிட வேண்டும் என்பதைதான் அவர் கடைசி வரை பின்பற்றி வந்தார்.

தேமுதிகவின் முக்கிய உறுப்பினரும் நடிகருமான மீசை ராஜேந்திரன் விஜயகாந்த் குறித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்திருந்தார். அவர் கூறியபோது, கேப்டன் ஷூட் முடிந்ததும் மதியம் சாப்பிடுகிற இடத்துக்கு சென்று எல்லோருக்கும் சிக்கன், மட்டன் இருக்கனு பார்ப்பார். பார்த்துவிட்டு கடைசியாகதான் அவர் சாப்பிடுவது வழக்கம். இதனை நான் பலமுறை நேரில் பாத்துள்ளேன்.

கறி இல்லையா? - மேனேஜரை அடி வெளுத்த விஜயகாந்த்

ஒரு முறை கடைசியாக 13 பேருக்கு கறி இல்லாமல் போனது. வெறும் குழம்பு மட்டும் கொடுத்துள்ளார்கள். கறி இல்லையா என்று உழியர்கள் கேட்க அதற்கு மேனேஜர் திட்டியுள்ளார். இதனை கவனித்த விஜயகாந்த் மேனேஜரை கூப்பிட்டு அடி வெளுத்துவிட்டார்.பின்பு தனது பணத்தை கொடுத்து கறி வாங்கி வர சொல்லி சமைத்து கொடுக்கப்பட்டது என்று கூறினார்.

From Around the web