பார்த்திபன் மாதிரியே மொத ராத்திரி இயக்குனர்... அவருக்கு வந்த பயத்தைப் பாருங்க!
பல வருடங்களுக்கு முன்னால ஒரு படத்தை இயக்கி அதுல கதாநாயகனா நடித்த பார்த்திபன் எப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றாரோ அது மாதிரி தான் இன்னைக்கு மொத ராத்திரி படம் மூலம் பெற்றிருக்கிறார் ராஜா கருப்பசாமி. பார்த்திபன் அந்த படத்தில் நடித்ததைப் பற்றி கேட்டபோது இந்த படத்தில் கதாநாயகனா நடிக்கச் சொல்லி பல பேரைக் கேட்டேன். யாரும் ஒத்துக்கல.
அதன் காரணமாகத்தான் அந்த படத்துல கதாநாயகனா நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பல பத்திரிகை பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். இப்ப மொத ராத்திரி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அந்தப் படத்தின் இயக்குனரான ராஜா கருப்பசாமியும் அன்றைக்கு பார்த்திபன் என்ன சொன்னாரோ அதைத்தான் திரும்ப சொல்லி இருக்கிறார்.
இந்த கதாபாத்திரத்துல நடிக்க சொல்லி பல பேரை நானும் கேட்டுப் பார்த்தேன். யாரும் நடிக்க மாட்டேன்னுட்டாங்க. என்னுடைய தயக்கத்தைப் போக்கி அந்த கதாபாத்திரத்துல நடிப்பதற்கு முக்கியமான காரணகர்த்தாக்கள்னா ஒண்ணு அந்த படத்தில் கதாநாயகனா நடித்த ரிஷிகாந்த், அதுக்கு அப்புறம் என்னுடைய உதவி இயக்குனர்கள், மூன்றாவதாக என்னுடைய தயாரிப்பாளர்கள். இவங்க எல்லாம் தைரியமாக என் பக்கம் நின்னதாலதான் அந்த கதாபாத்திரத்துல துணிவோடு நான் நடிச்சேன்.
துணிச்சலா நடிச்சிட்டாலும் படத்தினுடைய வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க வேற யாரையாவது நடிக்க வச்சிருக்கலாமோ அப்படிங்கற பயம் எனக்குள்ளே மிகப்பெரிய அளவிலே எழுந்தது. அந்த பயம் எல்லாம் எப்ப போச்சுன்னா பத்திரிகையாளர்களுக்காக அந்த படத்தை திரையிட்ட போதுதான். அவங்க அந்த படத்தைக் கொண்டாடுனது மட்டும் இல்லாம என்னுடைய நடிப்பையும் மிகப்பெரிய அளவிலே பாராட்டினாங்க.
அப்ப தான் பராவயில்லை என்கிற நம்பிக்கை எனக்குள்ளே பிறந்தது. ஆனா அதுக்காக தொடர்ந்து என்னோட எல்லா படங்களிலும் நான் நடிப்பேன் என்பது அர்த்தம் இல்லை. சரியான கதாபாத்திரங்கள் அமைந்து என் மனதுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று ஒரு பத்திரிகையில் பேட்டி கொடுத்துள்ளார் ராஜா கருப்பசாமி.
