அஜித்தை வைத்து அமீர் இயக்குவதாக இருந்த படம் குறித்து பேசிய 'மௌனம் பேசியதே' தயாரிப்பாளர்!
கோலிவுட்டில் இயக்குநராக அமீர் நான்கு படங்களே பண்ணியிருந்தாலும், அதில் 'மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன்' ஆகிய மூன்று படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இதில் 'மெளனம் பேசியதே' படத்தில் சூர்யா, த்ரிஷா, லைலா, நந்தா நடிக்க, இதை 'அபராஜீத் பிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது. சமீபத்தில், இதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ் ரகு கொடுத்த பேட்டியில் "'மௌனம் பேசியதே' படத்துக்கு பிறகு அமீர் இயக்கிய 'ராம்' படத்தை நடிகர் அஜித் பார்த்தார்.
அவருக்கு படம் ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் எங்க பேனர்ல அஜித் ரெண்டு படங்களில் நடிக்குறதா இருந்துச்சு. அதுல ஒரு படத்துக்கு அமீர் தான் இயக்குநர்.
இன்னொரு படத்தை 'வல்லரசு' பண்ண மகாராஜன் இயக்குறதா இருந்துச்சு. அப்புறம், முதல்ல 'நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கரவர்த்தி தயாரிப்பில் அஜித் - மகாராஜன் காம்பினேஷன்ல ஒரு படம் பண்ணிட்டு வந்த பிறகு, என்னோட பேனர்ல அவங்க ரெண்டு பேரையும் வச்சு பண்றதா இருந்துச்சு.
மகாராஜன் எங்களுக்கு சொன்ன டைட்டில், கதை எல்லாமே வேற. அவங்க பேனர்ல பண்ணி வெளி வந்த படம் தான் 'ஆஞ்சநேயா'. அதுக்கு அப்புறம் சில காரணங்களால எங்க பேனர்ல அஜித் பண்றதா இருந்த ரெண்டு படங்களுமே நடக்கல. ஆனாலும், அஜித் இன்னும் என்னுடன் நல்ல நட்பில் தான் இருக்கிறார்" என்று கூறியுள்ளார்.
