மேடை நாடகத்தின் போது ரசிகர்கள் அன்புத் தொல்லை... சமாளிக்க எம்ஆர்.ராதா செய்த யுக்தி!
பொதுவாகவே நடிகவேள் எம்ஆர்.ராதாவின் நாடகங்கள்ல கிண்டலும், கேலியும் அதிகமா இருக்கும். அதைக் கேட்டு ரசிக்கிறதுக்காகத்தான் கூட்டம் கூட்டமாக அவருடைய நாடகத்துக்குப் பொதுமக்கள் வருவார்கள். அதுபோன்ற நாடகங்கள்ல எம்ஆர்.ராதா நடிச்சு முடிச்ச உடனே பார்த்தீங்கன்னா அவரைப் பாராட்டுறதுக்காக பெரும் கூட்டம் மேடையில ஏறிவிடும். அதுக்குப் பின்னால எம்ஆர்.ராதா அவங்ககிட்ட இருந்து தப்பிச்சுப் போறதுக்கே ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் ஆகிடும்.
அதனால இதை எல்லாம் தவிர்ப்பதற்கு ஒரு யுக்தியைக் கையாண்டார் எம்ஆர்.ராதா. ரத்தக்கண்ணீர் நாடகத்தின் கடைசி காட்சியில தன்னுடைய மனைவியைத் தன் நண்பனான பாலுவுக்குத் திருமணம் செய்து கொடுப்பார். அந்தக் காட்சி நடிக்கப்படும்போது பின்னால எம்ஆர்.ராதா தான் இருக்கார் அப்படின்னு ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.
ஆனால் எம்ஆர்.ராதா மாதிரி வேடம் அணிந்த ஒருவரை அங்க நிறுத்திட்டு எம்ஆர்.ராதா கார் ஏறி அவர் பாட்டுக்குப் போயிடுவாராம். அப்போ தான் அந்த ரசிகர்களுக்குத் தெரிந்ததாம். ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து தப்பிக்க முடியும் அப்படிங்கறதுக்காக அவர் செய்த ஏற்பாடு இது.
மேடை நாடகங்கள்ல நடிக்கும்போது இதுபோன்ற சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு ஒரு தனித்திறன் வேண்டும். அந்த தனித்திறமை எம்ஆர்.ராதாவிடம் கொஞ்சம் கூடுதலாகவே இருந்தது என்பதுதான் உண்மை. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
