அப்பவே அவ்ளோ கண்டிஷன் போட்ட எம்ஆர்.ராதா? தோலுரித்துக் காட்டும் நாடகங்கள்..!

 
mr radha and rathakkanneer

 

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னால் நடிகவேள் எம்ஆர்.ராதா நடித்த படம் ரத்தக்கண்ணீர். அந்தக் காலத்தில் ரத்தக்கண்ணீர் கதையை எம்ஆர்.ராதா நாடகமாக நடித்துக் கொண்டு இருந்தார். ஏறக்குறைய தினமும் அந்த நாடகம் நடைபெறும். அந்தளவுக்கு வரவேற்பு ரசிகர்கள் மத்தியிலே அந்த நாடகம் பெற்றது. அதன் காரணமாகத் தான் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் அதைப் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தார். அந்த முடிவோடு தயாரிப்பாளர் பெருமாள் எம்ஆர்.ராதாவை அணுகியபோது, நிச்சயமா நான் ரத்தக்கண்ணீர்ல நடிக்கிறேன் என்றார்.

ரத்தக்கண்ணீர் நாடகம் தினமும் நடக்குது. இரவு 11 மணிக்குத் தான் நாடகம் முடியும். அதனால படப்பிடிப்புக்கு இரவு 11 மணிக்கு அப்புறம்தான் என்னால வர முடியும். இது முதல் கண்டிஷன். 2வது கண்டிஷன் என்னோட சம்பளத்தைப் பற்றி. இன்னைக்கு தமிழ்சினிமா உலகத்துல மிக அதிகமாக சம்பளம் வாங்கியது கே.பி.சுந்தராம்பாள் தான். அந்த அம்மாளுக்கு என்ன சம்பளம் கொடுத்தாங்களோ, அதை விட கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் எனக்கு சம்பளம் தரணும். அப்படி தருவதாக இருந்தால் இந்தப் படத்தில் நான் நடிக்கிறேன். 3வது இந்தப் படத்தின் உச்சக்கட்ட காட்சி.

அதுல படத்தின் கதாநாயகனான நான் என் நண்பனுக்கு எனது மனைவியை மணமுடித்து வைக்கணும். அந்தக் காட்சியைக் கொஞ்சம் கூட மாற்றக்கூடாது. அப்படியே இருக்கணும். இந்த நிபந்தனைகளுக்கு எல்லாம் உங்களுக்கு சம்மதம்னா நான் நடிக்கிறேன் என்றார் எம்ஆர்.ராதா. இந்த நிபந்தனைகளை எல்லாம் நாங்கள் விதித்துக் கொண்டு இருந்தபோது எம்ஆர்.ராதா ஒரு வெற்றிகரமான நடிகராக இருந்தாரா என்றால் இல்லை. அவரிடம் நாலைந்து படவாய்ப்புகள் இருந்ததா என்றால் இல்லை. அடுத்து எந்த ஒரு படவாய்ப்பும் இல்லாத நிலையில் இத்தனை நிபந்தனைகளையும் விதிக்கிறதுக்கு எந்த நடிகருக்குத் துணிச்சல் வரும்? அதுதான் எம்ஆர்.ராதா.

Tags

From Around the web