எம்.எஸ்.விக்காக மனைவியை அடித்த தேவா!.. அவரே சொன்ன பிளாஷ்பேக்!..

 
deva msv

தமிழ் சினிமாவில் போராடி மேலே வந்தவர் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா 15. வருடங்களுக்கும் மேல் போராடி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

ஏராளமான சின்ன பட்ஜெட் திரைப்படங்களுக்கு இசையமைத்து தயாரிப்பாளர்களுக்கு பிடித்த இசையமைப்பாளராக இருந்தார். எம்.எஸ்.வி, இளையராஜா ஆகியோரை பின்பற்றி தமிழ் சினிமாவில் இனிமையான பாடல்களை கொடுத்தவர் தேவா. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக அவர் காலமானார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் ஒரு முக்கிய தகவலை கூறியிருக்கிறார்.

திருமணமான மறுநாளே யாராவது மனைவியை அடிப்பார்களா? ஆனால் நான் அடித்தேன்.. ஏன்னா.. நான் குடிசை வீட்டில் இருந்தாலும் என்கிட்ட ஒரு ஹார்மோனிய பொட்டி இருக்கும். அதில் விஸ்வநாதன் அண்ணன் போட்டோவை ஒட்டி வச்சிருப்பேன்.. அதை தினமும் கும்பிடுவேன்..

கல்யாணம் ஆகி வந்த இரண்டாவது நாள் என் மனைவி வீட்டை கூட்டும் போது விளக்கமாத்தால ஹார்மோனிய பெட்டியை  தொடச்சிட்டாங்க.. அதை பார்த்தவுடனே கோபம் தாங்காம அவரை அடிச்சுட்டேன்.. அந்த அளவுக்கு விஸ்வநாதன் அண்ணா மேல எனக்கு பக்தி’ என்று அவர் கூறியிருக்கிறார்.

Tags

From Around the web