ரூ.60 கோடி பட்ஜெட்ல 'சாமுராய்'-ங்குற ஒரு ஸ்கிரிப்ட் பண்ணேன். ஆனா... தான் செய்த தவறு குறித்து பேசிய மிஷ்கின்!
நாம் பார்க்கும் திரைப்படத்தில் ஒரு ஷாட்டை பார்த்தாலே இது இயக்குநர் மிஷ்கின் இயக்கிய படம் என்று சொல்லிவிடலாம். அப்படி ஒவ்வொரு படத்தையும் தனக்கே உரிய ஸ்டைலில் தரமாக அவர் எடுப்பார்.
ஆனால், அவர் இயக்கத்தில் வெளியாகி பெரிய தோல்வியடைந்த படம் 'முகமூடி'. 2012-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படத்தில் ஜீவா 'சூப்பர் ஹீரோ'-வாக நடித்திருந்தார். இதை 'UTV மோஷன் பிக்சர்ஸ்' தான் தயாரித்திருந்தது.
சமீபத்தில், மிஷ்கின் கொடுத்த பேட்டியில் இப்படம் குறித்து பேசுகையில் "முதலில் நான் UTV நிறுவனத்துக்கு 'சாமுராய்'-ங்குற டைட்டில் வச்சு ஒரு கதையை 6 மாசத்துல டெவலப் பண்ணி திரைக்கதையா சொன்னேன். அவங்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு.

ஆனா, அதோட பட்ஜெட் வந்து ரூ.60 கோடி. அதுனால அவங்க அது பண்ண வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. அப்புறம் நான் ஒரே மாசத்துல பண்ண ஸ்கிரிப்ட் தான் 'முகமூடி'. அதான் நான் பண்ண தப்பு.
அதுக்கு நான் படமே பண்ணலன்னு சொல்லியிருக்கலாம். ஏன்னா, ஸ்கிரிப்ட் ஃபர்ஸ்ட் வெர்ஷன் முடிச்சதுமே அடுத்து ஷூட்டிங் போயாச்சு. இன்னும் ஒரு ரெண்டு மாசம் ஸ்கிரிப்ட்ல வொர்க் பண்ணியிருந்தா நல்லா வந்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
