'பிசாசு'-ல நடிச்ச ராதாரவி சாருக்கு 400 போன் கால்ஸ் பாராட்டி வந்துச்சு. ஆனா... சுவாரஸ்யத் தகவல் சொன்ன மிஷ்கின்!

 
Mysskin pisasu radharavi

பெரிய ஹீரோ, பிரம்மாண்ட மேக்கிங் எதுவுமின்றி இயக்கம் மிஷ்கின் என்று போட்டிருந்தாலே போதும், நாங்க தியேட்டருக்கு போய் பார்ப்போம் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

வழக்கமாக த்ரில்லர் ரூட்டில் பயணிப்பவர், கொஞ்சம் மாற்றி ஹாரர் ரூட்டில் சென்ற படம் தான் 'பிசாசு'. இதை இயக்குநர் பாலாவின் 'B ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் ஹீரோ, ஹீரோயினாக நாகா - பிரயாகா மார்ட்டின் நடித்திருந்தனர். கதாநாயகியின் அப்பா ரோலில் ராதாரவி நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் கல்லா கட்டியது.

சமீபத்தில், இயக்குநர் மிஷ்கின் கொடுத்த பேட்டியில் இந்த படம் குறித்து பேசுகையில் "இதுல வரும் அப்பா ரோலில் ராதாரவி சாரை நடிக்க வைக்கப்போறேன்னு சொன்னதும், பலர் என்கிட்ட நல்ல அப்பாவுக்கு எப்படிங்க ராதாரவி சாரை போடுவீங்கன்னு கேட்டாங்க. அதுக்கு நான் சொன்னேன், ஏன் ராதாரவி சார் நல்ல அப்பாவா இருக்க கூடாதா?-ன்னு கேட்டேன்.

அப்புறம் ராதாரவி சாரை கமிட் பண்ணி 4 நாள் எந்த வசனமும் பேச வைக்காம, படுக்குற மாதிரி உட்கார்ந்திருக்க மாதிரி ஷூட் பண்ணேன். அவர் ஏதோ தப்பான ஒரு படத்துல வந்து மாட்டிக்கிட்டோமோன்னு ஃபீல் பண்ணார். போக போகத் தான் அவருக்கு புரிய ஆரம்பிச்சது. அதுவும் க்ளைமேக்ஸ்லாம் ஷூட் பண்ணும்போது, அப்படியே ஐஸ்ல 2 மணி நேரம் உட்கார்ந்திருந்தார்.

Radharavi sivakumar pisasu

அவருக்கு சில body language மட்டும் தான் நான் சொன்னேன். ரொம்ப அருமையா நடிச்சார். படம் ரிலீஸ் ஆன பிறகு 3-வது நாள் எனக்கு ராதாரவி சார் போன் பண்ணி, மிஷ்கின் என் லைஃப்ல இத்தனை போன் கால்ஸ் என்னை பாராட்டி எனக்கு வந்ததில்ல. ஒரு நாளைக்கு 400 போன் கால்ஸ் வருதுன்னு சொன்னார்.

நான் ரொம்ப சந்தோஷம் சாருன்னு சொன்னேன். முதல்ல நான் அந்த அப்பா ரோலுக்கு சிவகுமார் சாரை தான் நடிக்க வைக்கணும்ன்னு நினைச்சேன். பாலா சார் கிட்டயும் சொன்னேன். அவரெல்லாம் பண்ண மாட்டாரு, நீ வேற ஒருத்தரை வச்சு பண்ணுன்னு சொல்லிட்டார். அப்புறமா தான் எனக்கு ராதாரவி சார் மைண்டுக்கு வந்தார்" என்று கூறியுள்ளார்.

From Around the web