எம்ஜிஆரின் பல படங்களில் நாகேஷ்… அட இதுதான் காரணமா?
ஒரு காலகட்டத்தில் நகைச்சுவை நடிகரான நாகேஷ் பரபரப்பான நடிகராக இருந்தார். ஒரே நாளில் 4 படங்களில் கூட நடித்ததுண்டு. அதே மாதிரி நானே அவருடன் 4 படப்பிடிப்புகளுக்குப் போயிருக்கேன்.
அப்படி ஏங்கிக் கொண்டு இருந்தவர்தான் நாகேஷ். அந்தக் காலகட்டத்தில் எல்லா கதாநாயகர்களின் படங்களிலும் நடித்துக் கொண்டு இருந்தார். எம்ஜிஆர், சிவாஜின்னு உச்ச நட்சத்திரம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ஏவிஎம்.ராஜன் என்று எல்லாருடைய படங்களிலும் நடித்துக் கொண்டு இருந்தார் நாகேஷ்.
அப்படி ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டு இருந்ததால பல படப்பிடிப்புகளுக்குக் கொஞ்சம் தாமதமாகத் தான் செல்வார் நாகேஷ். மற்ற நடிகர்களின் படப்பிடிப்புகளுக்குக் கொஞ்சம் தாமதமாகப் போனால் கூட அவங்க ஏத்துக்குவாங்க. ஆனால், எம்ஜிஆர், சிவாஜியின் படப்பிடிப்புகளுக்கு எப்படி போவது? இதைப் பற்றி ஒரு நிருபர் நாகேஷிடம் கேட்டார்.
அதற்கு நாகேஷ் சொன்ன பதில் தான் ரொம்ப முக்கியமானது. எம்ஜிஆர், சிவாஜி இருவருமே என்னை மிகுந்த அன்போடு நடத்தினர். இதுல எம்ஜிஆர் பற்றி ஒரு விஷயத்தை நான் குறிப்பிட்டு சொல்லியே ஆக வேண்டும். என் மீது மிகுந்த அன்பு வைத்து இருந்த காரணத்தினால நான் எந்தெந்த படப்பிடிப்புகளுக்கு எல்லாம் போகணுமோ அந்த டைரக்டர்கள்கிட்ட முதல்ல என் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்குங்க.
நாகேஷ் வந்ததுக்குப் பின்னால அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எல்லாம் படமாக்கிக் கொள்ளலாம் என்று சொல்வாராம் எம்ஜிஆர். அவ்ளோ பெரிய நடிகர் இந்தளவு பெருந்தன்மையோடு நடந்துக்கிட்டதால தான் பல எம்ஜிஆர் படங்கள்ல என்னால நடிக்க முடிந்தது. இல்லையென்றால், அத்தனை எம்ஜிஆர் படங்களில் நான் நடித்திருக்கவே மாட்டேன் என்று ஒரு பத்திரிகை பேட்டியில் பதிவு செய்துள்ளார் நாகேஷ்.
