நல்லவனுக்கு நல்லவன் படம் உருவான விதம்… கலங்கிய கதாசிரியர்… தயாரிப்பாளர் அதிரடி!
தர்மாசுடு என்ற தெலுங்கு படத்தைப் பார்த்த இயக்குனர் திருலோகசந்தர் தன்னோட நண்பரான AVM.சரவணனுக்குப் பரிந்துரை செய்தார். தமிழ்ல இந்தப் படத்தை எடுத்தா ரொம்ப நல்லா அமையும்கறது அவரோட கருத்தா இருந்தது. தன்னோட ஆஸ்தான கதாசிரியரான பஞ்சு அருணாசலத்தை அழைத்து இந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார் ஏவிஎம்.அதிபரான சரவணன்.
என்ன காரணத்தாலோ பஞ்சு அருணாசலத்துக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. ஹிட்லர் உமாநாத் என்ற தமிழ்ப்படத்தின் சாயலில் அந்தப் படம் இருப்பதாக நினைத்தார். ஏற்கனவே ஹிட்லர் உமாநாத் தமிழ்ல சரியா போகல. அதனால இதைத் தமிழ்ல எடுத்தா அந்தளவு பெரிசா போகாது என்பது அவருடைய எண்ணமாக இருந்தது. ஆனால் எம்.சரவணனைப் பொருத்தவரைக்கும் ஏதோ ஒரு விஷயம் அந்தப் படத்தில் இருப்பதாக அவருக்குப் பட்டது.
அந்த எண்ணம் காரணமாக அடுத்த கதாசிரியர் விசுவை அழைத்து அவருக்கு அந்தப் படத்தைப் போட்டுக் காண்பித்தார். பஞ்சு அருணாச்சலம் படத்தைப் பார்த்து விட்டு என்ன கருத்து சொன்னாரோ அதற்கு மாறான ஒரு கருத்தை சொன்னார் விசு. படத்துல சின்ன சின்ன தப்புகள் இருக்குறது உண்மைதான். அதை சரிபண்ணிட்டா இந்தப் படம் வெற்றிப்படமாக அமையும் என்று அவர் சொன்னார்.
உடனே, அவரை அந்தப் படத்துக்கு திரைக்கதை எழுத ஒப்பந்தம் செய்தார் எம்.சரவணன். அந்தப் படத்துக்காக விசுவுக்குப் பேசப்பட்ட சம்பளத்தொகை ரொம்ப குறைவானது. ரொம்பக் கம்மியா இருக்கே கொஞ்சம் கூட்டிக் கொடுத்தா நல்லாருக்கும்னு விசு சொல்ல, முதல்ல ஒர்க் பண்ணுங்க. அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டார் சரவணன்.
ரஜினி நாயகனாக நடிக்க, நல்லவனுக்கு நல்லவன் என்ற பெயரில் உருவான அந்தத் திரைப்படம் எப்படிப்பட்ட வெற்றிப்படமாக அமைந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அப்படி ஒரு வெற்றிப்படமாக அமைந்ததும், கதாசிரியர் விசுவை அழைத்து அவர் என்ன சம்பளம் பேசி இருந்தாரோ, அதை இரட்டிப்பாக்கி அவருக்குக் கொடுத்தார். ரஜினியை வைத்து ஏவிஎம்.சரவணன் தயாரித்த படங்களில் அவருக்கு மிகவும் பிடித்ததுன்னா அது நல்லவனுக்கு நல்லவன் படம் தானாம்.
