அப்பவே ஜன நாயகன் வினோத் வியந்து பார்க்கும் டைரக்டரா வருவாருன்னு தெரிஞ்சது - நட்டி
'சதுரங்க வேட்டை' என்ற படம் வந்தபோது, அந்த படத்தின் இயக்குநர் பெயர் என்ன? யார் அவர்? என்று கேட்க வைத்தவர். இன்று உலகெங்கும் விஜய் எனும் உச்ச நட்சத்திரத்தின் கடைசி படத்தை எடுத்து தெரியும் அளவுக்கு அவருடைய வளர்ச்சி பாராட்ட வேண்டிய ஒன்று.
அந்த பாராட்டுக்கும், 'சதுரங்க வேட்டை' டு 'ஜன நாயகன்' மற்றும் இதற்கு இடையே எடுத்த படங்களுக்கும் சொந்தக்காரர் ஹெச்.வினோத். இவர் இயக்கிய முதல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நட்டி.

சமீபத்தில், நட்டி கொடுத்த பேட்டியில் ஹெச்.வினோத் குறித்து பேசுகையில் "வினோத் சார் வந்து என்கிட்ட 'சதுரங்க வேட்டை' கதையை சொல்றதுக்கு முன்னாடி, சில விஷயங்கள்லாம் உங்ககிட்ட கேட்டுக்கலாமான்னு சொன்னார்.
நான் கேளுங்கன்னு சொன்னேன். அவர் நீங்க அடி வாங்கணும் பரவாலையான்னு கேட்டார். நிஜமா அடிக்காத வரைக்கும் சந்தோஷம் சாருன்னு சொன்னேன். அப்புறம் இந்த படத்துல உங்க கேரக்டர் நெகட்டிவ் shade-ல இருக்கும், அது உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லையே சாருன்னு கேட்டார்.

அதெல்லாம் பிரச்சனை இல்ல சாருன்னு சொன்னேன். நீங்க ஒரு திருடன் அப்படின்னு உங்களுக்கு பேர் வந்தா, ஒத்துக்குவீங்களா?-ன்னு கேட்டார். படத்துல தான சார் அதுனால என்ன சாருன்னு சொன்னேன். அப்புறமா தான் மொத்த கதையும் சொன்னார். நான் கதை கேட்டுட்டு கிளாப் பண்ணேன்.
எங்க இருந்தீங்க வினோத் சார் இவ்ளோ நாளா?-ன்னு கேட்டேன். அவர் நான் இங்கதான் சார் இருக்கேன்னு சொன்னார். பிரமாதமா இருக்கு நான் இதுல கண்டிப்பா பண்றேன்னு சொன்னேன். இந்த படம் பண்ணும்போதே இது வெற்றியடையும்ன்னு எனக்கு தெரிஞ்சது. அப்புறம் வினோத் சார்கிட்டயும் வேற ஒரு விஷயம் இருக்குன்னும், இவர் தமிழ் சினிமால வியந்து பார்க்க கூடிய ஒரு டைரக்டரா வருவாருன்னும் எனக்கு தோணுச்சு" என்று கூறியுள்ளார்.
