விஜய் - சிவாஜி கூட்டணியின் ஒன்ஸ் மோர் வெளியாகி 29 ஆண்டுகள் நிறைவு

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜியுடன் விஜய்  சேர்ந்து நடித்த ஒரே படம் ஒன்ஸ் மோர். இப்படம் வெளியாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்தது.
 
once more movie

தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜியுடன் விஜய்  சேர்ந்து நடித்த ஒரே படம் ஒன்ஸ் மோர். இப்படம் வெளியாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்தது.

தளபதி விஜய் நடிஅக்ர் திலகத்துடன் இணைந்து நடிதத படம் ஒன்ஸ் மோர். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும் சரோஜாதேவி, மணிவண்ணன்  மற்றும் அன்சு அரவிந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிம்ரன் நடிப்பில் வெளியான முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கிய சிவாஜி கணேசனும், அந்த கால கட்டத்தில் வளர்ந்து வரும் இளம் நாயகனாக இருந்த விஜய்யும் இணைந்து நடித்ததால் இப்படம் மீது பெரிய எத்ரிபார்ப்பு ஏற்பட்டது.

once more movie

படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது தேவாவின் இசை.  பூவே பூவே பெண் பூவே ,  ஊர்மிளா ஊர்மிளா  போன்ற பாடல்கள் அக்காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.  கடந்த 1997ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான இப்படம் நலல் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.  ஒன்ஸ் மோர் படம் வெளியாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக விஜய் ரசிகர்கள் இப்படம் குறித்த தகவல்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

From Around the web