3 வித்தியாசமான வேடங்களில் கமல் சார் நடிக்குறதுக்கு ஒரு கதை சொன்னேன்... மிஸ்ஸானதுக்ககான காரணத்தை சொன்ன இயக்குநர் பி.வாசு!

 
P vasu kamalhaasan

தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகர்களை வைத்து பல மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் பி.வாசு. இவர் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தின் பெயரை சொன்னால், டக்கென 2K கிட்ஸுக்கும் தெரிந்து விடும்.

இவர் இயக்கத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் இதுவரை நடிக்கவில்லை. சமீபத்தில், பி.வாசு கொடுத்த பேட்டியில் கமலுடனான சந்திப்பு குறித்து பேசுகையில் "'சந்திரமுகி' படம் முடிஞ்சதும் ரஜினி சாரே கமல் சாருக்கு போன் பண்ணி, வாசு சார்கூட ஒரு படம் பண்ணுங்க கமல்ன்னு சொன்னார்.

அப்புறம் என்கிட்டயும் அவர் போன் பண்ணி சொன்னார். நான் உடனே போய் கமல் சாரை பாத்து ஒரு கதை சொன்னேன். அப்பா, மகன் ஃப்ளாஷ்பேக்ல ஒரு அப்பான்னு மொத்தம் 3 வித்தியாசமான ரோல்ஸ்.

Dasavatharam Rajinikanth kamalhaasan

கமல் சார் கதையை கேட்டுட்டு ரொம்ப சூப்பரா இருக்குன்னு சொன்னார். அவருக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஆனா, அந்த டைம்ல தான் அவர் 'தசாவதாரம்' படம் பண்ண வேண்டிய சூழல்ல இருந்தார். அதுல அவருக்கு 10 ரோல்ஸ்.

அப்புறம் அவர் என்ன நேர்ல கூப்பிட்டு, நீங்க சொன்ன கதைய கொஞ்சம் தள்ளி பண்ணலாம். ஏன்னா, நான் இப்போ 'தசாவதாரம்' படம் உடனே பண்ணனும். அதுல 10 ரோல்ஸ் பண்ணிட்டு, இதுல 3 ரோல்ஸ்ன்னா தப்பாயிடும். அதுனால தான் சொல்றேன்னு சொன்னார். அப்புறம் நான் ரஜினி சார்கிட்டயும் போன் பண்ணி அவர் இப்படி சொன்னாருன்னு சொல்லிட்டேன். அதுக்கப்புறம் நானும் கமல் சாரை பாக்கல. அவரும் இது தொடர்பா என்கிட்ட எதுவும் பேசல" என்று கூறியுள்ளார்.

From Around the web