நான் சொன்ன Controversial-ஆன அரசியல் கதையை கேட்டுட்டு Jerk-ஆன விஜய்... பி.வாசு சொன்ன ஃப்ளாஷ்பேக்!

 
Vijay P Vasu

ரஜினியின் 'சந்திரமுகி', விஜயகாந்தின் 'சேதுபதி IPS', பிரபுவின் 'சின்ன தம்பி', சத்யராஜின் 'நடிகன்', அஜித்தின் 'பரமசிவன்' போன்ற படங்களை இயக்கியவர் தான் பி.வாசு. இவர் முன்னணி நடிகரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யை வைத்து இதுவரை படம் இயக்கவில்லை.

ஆனால், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இது குறித்து பி.வாசு சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் "விஜய்-க்கு கண்டிப்பா ஒரு படம் பண்ணனும்ன்னு நான் நினைச்சேன். நாங்க ரெண்டு பேரும் மீட் பண்ணபோது, ஒரு controversial-ஆன அரசியல் கதை சொன்னேன்.

அவர் கதைய கேட்டுட்டு, first half எனக்கு பிடிச்சிருக்கு சார். ஆனா, second half எனக்கு கொஞ்சம் jerk-ஆ இருக்கு சாருன்னு சொன்னார். நானும் சரி ஓகே இது வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அப்புறம் இன்னொரு மிகப் பெரிய படம், அது இப்ப பேர் சொல்லக் கூடாது.

Vijay

அதை வந்து, நான் விஜய்யை வச்சு பண்ணலாம்ன்னு ப்ளான் பண்ணேன். அப்புறம் அவரை மீட் பண்ணி கதையும் சொன்னேன். அவர் இது பண்ணலாம் சார் நீங்க டெவலப் பண்ணுங்கன்னு சொன்னார். நானும் full script எழுதி முடிச்சேன். அப்போ தான் அவர் நடிச்ச 'மெர்சல்' படம் ரிலீஸ் ஆச்சு.

அப்புறம் நான் ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு வந்துட்டேன்னு அவர்கிட்டயும் சொன்னேன். அவரும் நான் கண்டிப்பா ஒரு நாள் முழு கதையையும் கேக்குறேன் சாருன்னு சொன்னார். நானும் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்" என்று கூறியுள்ளார்.

From Around the web