படிக்காதவன் படத்தின் மெகாஹிட்... டைரக்டர் கொடுத்த டச்!

படிக்காதவன் படத்தின் படப்பிடிப்பின்போது அந்தப் படத்தின் இயக்குனரான ராஜசேகர்கிட்ட நாகேஷ் எம்ஆர்.ராதாவைப்
 
padikkathavan

படிக்காதவன் படத்தின் படப்பிடிப்பின்போது அந்தப் படத்தின் இயக்குனரான ராஜசேகர்கிட்ட நாகேஷ் எம்ஆர்.ராதாவைப் பற்றிப் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை இப்போது பார்ப்போம். 

ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது அந்த செட்டுக்கு எம்ஆர்.ராதா போயிருக்கிறார். அங்கு அந்தக் கதாநாயகி உணர்ச்சிகரமாக ஒரு காட்சியில் அழுது நடிப்பதைப் பார்த்தார். அவர் நடிப்பதைப் பார்த்த எம்ஆர்.ராதா கட் கட் கட் என்று சொல்ல, அந்த செட்ல இருந்த எல்லாரும் எம்ஆர்.ராதாவை திரும்பிப் பார்த்துருக்காங்க. என்னாச்சு? எதனால இவர் கட் சொன்னாருன்னு எல்லாரும் பார்த்தாங்க.

அப்போ, இந்தக் காட்சி எவ்வளவு அருமையான காட்சி... எப்படி உணர்ச்சிகரமா நடிக்கணும். உனக்கு சரியா நடிக்க வரலன்னா டைரக்டர்கிட்ட எல்லாம் போய்க் கேட்காதே. புரொடியூசர்கிட்ட போ. அவருக்கிட்ட சார் எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்னு கேள். அந்தப் புரொடியூசர் கண்ணீர் விட்டு நடிப்பாரு பாரு. அதைப் பார்த்தேன்னா எப்படி கண்ணீர் விட்டு நடிக்கணும்னு தெரிஞ்சிடும். இதைப் பலத்த சிரிப்புக்கு இடையில் நாகேஷ் சொன்னார். சொன்ன பிறகு என்னாலயும் சிரிப்ப அடக்க முடியலன்னு ராஜசேகர் ஒரு பத்திரிகைப் பேட்டியில் பகிர்ந்துள்ளார். 

Tags

From Around the web