கவுண்டமணி காஸ்ட்லி லைஃப் வாழ்ந்துட்டரு!.. பார்த்திபன் சொன்ன தகவல்...

 
goundamani

கோவையை சேர்ந்தவர் கவுண்டமணி. நடிப்பில் ஆர்வம் கொண்ட கவுண்டமணி கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள நாடக கம்பெனிகளில் சேர்ந்து பல வருடங்கள் நாடகங்களில் நடித்து வந்தார். பாக்கியராஜின் அறிமுகம் கிடைக்கவே சென்னையில் அவருடன்தான் கவுண்டமணி தங்கியிருந்தார். பாக்கியராஜ் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்து 16 வயதினிலே படத்தில் வேலை செய்த போது அந்த படத்தில் ரஜினியுடன் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க கவுண்டமணியை ரெகமெண்ட் செய்து பாக்யராஜ் நடிக்க வைத்தார்..

அதன்பின் பல படங்களிலும் நடித்து, ஒரு கட்டத்தில் தனி டிராக்கில் கவுண்டமணியும், செந்திலும் பல படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தனர். 90களில் பல திரைப்படங்கள் ஓடுவதற்கு கவுண்டமணி காமெடி தேவையான ஒன்றாக இருந்தது. கதாநாயகனை விட கவுண்டமணி அதிக சம்பளம் வாங்கினார். ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து படங்களில் கூட நடித்த
ரார்.

ராமராஜன், சத்யராஜ், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களிலும் கவுண்டமணி பிரதான காமெடி நடிகராக இருந்தார். ஒரு கட்டத்தில் படத்தில் அவர்களுக்கு இணையாகவும் கவுண்டமணி நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில், வயது முதிர்வு, உடல் நலக்குறைபாடு காரணமாக சினிமாவில் நடிப்பதை கவுண்டமணி குறைத்துவிட்டார் அதன் பின்னர்தான் விவேக், வடிவேலு, சந்தானம் போன்ற காமெடி நடிகர்கள் வந்தனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ‘கவுண்டமணி 16 வயதினிலே படம் வரதுக்கு முன்னாடி தேனாம்பேட்டைல இருந்த எல்டாம்ஸ் ஹோட்டல் முன்னாடி யாராவது வாய்ப்பு தருவாங்களான்னு பரிதாபமாக நின்னுகிட்டு இருப்பார். ஆனால் சினிமாவில் வந்த அப்புறம் ஷூட்டிங் வந்தா அங்க இருக்க பெரிய ஸ்டார் ஹோட்டல்லதான் தங்குவார். ஷூட்டிங் முடிஞ்சதும் ஸ்டைலா அந்த பாத் டவலை கட்டிக்கிட்டு பந்தாவா இருப்பார். சாப்பாடுல என்ன பெஸ்டோ அதைதான் சாப்பிடுவார். பெஸ்ட் மட்டும்தான் அனுபவிப்பார்.. ஹாலிவுட் படம்தான் பார்ப்பார். அவர் வாழ்க்கையை ரொம்ப அழகா வாழ்ந்தார்’ என கூறியிருக்கிறார்.

Murugan ..
Murugan ..

5201 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web