11-வது ஆள் டு 1-வது உதவி இயக்குநர்... பாக்யராஜின் பாராட்டால் உயர்ந்த பார்த்திபன்!

 
Bhagyaraj Parthiban

தமிழ் திரையுலகினரும், சினிமா ரசிகர்களும் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவை இழந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள், அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் மரணம். 

இவர் எப்படி பாரதிராஜாவின் சிஷ்யரோ, அதேபோல் இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவர் பார்த்திபன். நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் "நான் பாக்யராஜ் சார்கிட்ட போய் 'சந்தோஷ நேரங்கள்'-ன்னு ஒரு கதை சொல்லி தான் உதவி இயக்குநராக சேர்ந்தேன்.

அப்போ, அங்க ஆல்ரெடி 10 பேரு அவர்கிட்ட உதவி இயக்குநர்களா வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. நான் தான் 11-வது ஆள். எனக்கு அப்ப சினிமாவை பத்தி எதுவுமே தெரியாது. ஆனா, எப்படியாவது நடிக்கணும்ன்னு மட்டும் தான் ஆசை இருந்துச்சு.

அதுக்கு நான் தேர்ந்தெடுத்த பாதை தான் இந்த உதவி இயக்குநர் வேலை. நடிகரா இருக்குறத விட உதவி இயக்குநரா இருக்குறவங்களுக்கு நிறையா அறிவு வேணும், அது என்கிட்ட இல்ல. ஆனாலும், story discussion டைம்ல நான் ரொம்ப யோசிச்சு சொல்லும் ஒரு காட்சியை கேட்டுட்டு பாக்யராஜ் சார், நீ சொல்ற விஷயம் ஒரிஜினலா இருக்குன்னு சொல்லி என்னை ரொம்ப பாராட்டுவார்.

அதுக்கப்புறம் நான் பாக்யராஜ் சார் மனசுல இடம்பிடிச்சுட்டேன். 11-வது இருந்த ஆள், கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி அவர் இயக்கி, நடிச்ச 'தாவணிக் கனவுகள்' படத்துல முதல் உதவி இயக்குநர் ஆனேன். அதோட, அதுல ஒரு postman வேடத்துலயும் என்ன பாக்யராஜ் சார் நடிக்க வச்சாரு" என்று கூறியுள்ளார்.

From Around the web