விஜய் சாரின் 'சிவகாசி'-யை பாத்துட்டு ரஜினி சார் என்ன சொன்னார் தெரியுமா?... சுவாரஸ்யத் தகவல் சொன்ன இயக்குநர் பேரரசு!
தமிழ் சினிமாவில் விஜயகாந்த், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பேரரசு.
விஜய்யை வைத்து தனது முதல் படமான 'திருப்பாச்சி'-யை இயக்கிய பேரரசுவுக்கு, இரண்டாவது பட வாய்ப்பையும் கொடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் 'தளபதி'. அந்த படம் தான் 'சிவகாசி'.
2005-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு 'திருப்பாச்சி' வந்து ஹிட்டாகிறது. அதே வருடம் இறுதியில் தீபாவளிக்கு 'சிவகாசி' ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் விஜய்-க்கு ஜோடியாக அசின் நடித்திருந்தார்.

விஜய், அஜித், விஜயகாந்தை வைத்து படங்கள் இயக்கினாலும், பேரரசு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் தீவிர ரசிகராம். சமீபத்தில், இயக்குநர் பேரரசு கொடுத்த பேட்டியில் ரஜினி குறித்து பேசுகையில் "விஜய் சார் 'சிவகாசி' ஷூட்டிங் டைம்ல, இந்த படத்தை பாத்துட்டு ரஜினி சார் உங்கள படம் பண்ண கூப்பிடுவார் பாருங்கன்னு சொன்னார். அந்த அளவுக்கு அவருக்கு 'சிவகாசி' ஸ்கிரிப்ட் மேல நம்பிக்கை இருந்துச்சு.
விஜய் சார் சொன்ன மாதிரி ரஜினி சார் படம் பண்ண கூப்பிடல. ஆனா, 'சிவகாசி' படம் பாத்துட்டு எனக்கு போன் பண்ணினார். நான் அப்போ அஜித் சாரோடோ 'திருப்பதி' படம் கமிட்டாகி ஸ்டோரி டிஸ்கஷன்ல இருந்தேன்.
ரஜினி சார் என்கிட்ட, படம் ரொம்ப நல்லா இருந்துச்சுன்னு சொல்லிட்டு ரெண்டு மூன்று சீன்கள் பற்றி பேசினார். ஒரு சீன்ல வசனம் பவர்ஃபுல்லா இருந்துச்சுன்னு சொன்னார். உங்களுக்கு சென்டிமென்ட் நல்லா வருது. சென்டிமென்ட் கரெக்டா வந்தாலே லாங் லைஃப் சினிமால இருக்கலாம். வாழ்த்துக்கள்ன்னு சொன்னார்" என்று கூறியுள்ளார்.
