வீடு, கார் வாங்கிக்கோங்க!.. ரஜினி கொடுத்த பணத்தை வாங்க மறுத்த பாடலாசிரியர் !..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் உதவிகளைச் செய்துள்ளார்
 
rajini

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் உதவிகளைச் செய்துள்ளார். அந்த வகையில், கவிஞர் பிறைசூடனுக்கு உதவ ரஜினி முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பிறைசூடனே ஒரு பேட்டியில் பகிர்ந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் கவிஞர் பிறை சூடன்.  நூறுக்கும் மேற்பட்ட பாடல்கள், பக்தி பாடல்களை எழுதியுள்ளார்.  சதுரங்க வேட்டை , புகழ், அண்ணாத்த உள்ளிடட் சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் எழுதிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன.  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான  ராஜாதி ராஜா படத்தில் இடம்பெற்ற மீனம்மா மீனம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்த காலம் அது. அந்தப் பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனைச் சந்திக்க ரஜினி விரும்பியுள்ளார்.

ரஜினியின் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார் பிறைசூடன். அவரைப் பார்த்த ரஜினி,  காரில் வரவில்லையா? எனக் கேட்டுள்ளார். அதற்கு,  இல்லை, நான் விரும்பும் தமிழ் என்னை அந்த நிலையில்தான் வைத்திருக்கிறது எனப் பதிலளித்துள்ளார் பிறைசூடன். சொந்த வீடு இருக்கிறதா என்று கேட்டதற்கும் இல்லை எனக் கூறியுள்ளார்.

பின்னர் நாட்டு நடப்பு, ஜோதிடம் எனப் பல்வேறு விஷயங்களைப் பற்றி இருவரும் பேசியுள்ளனர். பிறைசூடன் கிளம்பும்போது வீட்டிற்குள் சென்ற ரஜினி, ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து,  வீடு, கார் எல்லாம் வாங்கிக்கோங்க  என்று அவரது கைகளில் திணித்துள்ளார். ஆனால், அதனை வாங்க மறுத்த பிறைசூடன்,  வேண்டாம் சார், என்றாவது ஒருநாள் நானே வாங்கிவிடுவேன். எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் எழுத வாய்ப்பு கொடுங்கள்  என்று கூறி அந்தப் பெட்டியைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்த பிறைசூடன், அந்தப் பெட்டியில் அன்றைய மதிப்பில் எப்படியும் 5 லட்சம் ரூபாய் இருந்திருக்கும் என்றும், இன்றைய மதிப்பில் அது 5 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும் தனது கணிப்பைத் தெரிவித்திருந்தார்.   அப்படியொரு மனது எல்லோருக்கும் வந்துவிடாது என ரஜினியின் உதவும் குணத்தை நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார் பிறைசூடன்.  

கடந்த 2021ம் ஆண்டு பிறைசூடன் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Sai Vikas
Sai Vikas

140 Articles

Sai vikas is an experienced digital journalist with 16years of expertise in online news reporting. He specializes in covering cinema and sports

From Around the web