ரஜினி முகத்தில் காரி துப்பிய பாரதிராஜா!.. 16 வயதினிலே ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!..

 
pathinaru


பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் 16 வயதினிலே. இந்த திரைப்படத்தில் கமல், ரஜினி, ஸ்ரீதேவி ஆகிய மூவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படம் அவர்கள் மூவருக்கு மட்டுமல்ல.. பாரதிராஜாக்கும் ஒரு பெரிய பேரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது. இந்த படத்தில் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பாக்யராஜ்.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சம்பவம் பற்றி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். சப்பாணியை அடித்த பரட்டையை ஸ்ரீதேவி திட்டுவது போல் ஒரு காட்சி.. திட்டி முடித்துவிட்டு ரஜினி முகத்தில் அவர் காரி துப்ப வேண்டும்.. அதற்காக சோப்பு முறை தயாராக வைத்திருந்தனர்.. பலமுறை சோப்பு முறை வைத்தும் முகத்தில் சரியாக படவில்லை..

எனவே உண்மையாகவே துப்புங்கள் என ஸ்ரீதேவியிடம் சொன்னார் ரஜினி. ஸ்ரீதேவி ‘ஐயோ மாட்டேன்’ என்று அலறி ஓடினார்.. காட்சி ‘உயிர்ப்போடு வரவேண்டும் நீங்களே துப்புங்கள்’ என்று பாரதிராஜாவிடம் சொன்னார் ரஜினி./ பாரதிராஜாவோ தயங்கி தயங்கி முகத்தில் துப்பினார்.

படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அவர்கள் முகத்திலே படுவது போல் அந்த காட்சி பதிவானது.. ரஜினியை கட்டிப் பிடித்து கைக்குட்டையால் முகத்தை துடைத்துவிட்டு கண்ணீர் சிந்துகிறார் பாரதிராஜா.. இது அருகிலிருந்து பார்த்தவர் பாக்யராஜ். இது அவரின் சுயசரிதையில் பதிவாகியுள்ள சம்பவம்.. நடிப்பு என்பது நடிப்பு அல்ல.. அர்ப்பணிப்பு’ என பதிவிட்டிருக்கிறார்.

Tags

From Around the web