எனக்கும் பாரதிராஜாவுக்கும் வந்த முதல் சண்டை!.. வைரமுத்து சொன்ன பிளாஷ்பேக்!..
16 வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராகி அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களையும் இயக்கி தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கியவர் இயக்குனர் பாரதிராஜா. குறிப்பாக கிராமத்து மக்களின் வாழ்க்கையை அப்படியே திரைப்படங்களில் பிரதிபலித்தவர் இவர். கிராமத்து படங்கள் மட்டும் இல்லாமல் டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி போன்ற பல திரைப்படங்களையும் இவர் இயக்கி அதில் வெற்றி பெற்றும் காட்டியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக இயக்குனர் பாரதிராஜா மரணமடைந்தார். அவரின் விருப்பப்படி அவரின் உடல் தேனியில் உள்ள அவரின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது..
பாரதிராஜாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் கவிஞர் வைரமுத்து. பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் இடம்பெற்ற ‘இது ஒரு பொன்மாலைப் பொழுது’ என்கிற பாடல் மூலமாகத்தான் வைரமுத்து தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன்பின் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையில் வைரமுத்து பல படங்களிலும் வைரமுத்து பாடல்கள் எழுதினார். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதை, காதல் ஓவியம், மண்வாசனை, புதுமைப்பெண், முதல் மரியாதை போன்ற படங்களில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும் பல ரசிகர்களின் ஃபேவரைட் பாடல்களாக இருக்கிறது..
இந்நிலையில்தான், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய வைரமுத்து பாரதிராஜாவுடன் தனக்கு ஏற்பட்ட முதல் சண்டை பற்றி கூறியிருக்கிறார். முதல் மரியாதை படத்தில் வரும் ராசாவே உன்ன நம்பி பாடலில் ‘பருவம் தெரியாம மலையும் பொழிஞ்சாச்சு.. விவரம் தெரியாம உடம்பும் நனைஞ்சாச்சு’ என்று எழுதியிருந்தேன்.
அந்த உறவில் இருவருக்கும் தேக சம்பந்தம் இருப்பதாக நான் காட்டவில்லை.. ஒடம்பும் நனைஞ்சாச்சு என்றால் உடலுறவு என பொருள் வந்துவிடும் என பாரதிராஜா தயங்கினார். நான் பதறிப்போய் ‘மனசும் நனைஞ்சாச்சு’ என்று மாற்றேனேன். ‘ஆஹா’ என்றார். இந்த பாடல் சம்பந்தமாகத்தான் அவருடன் எனக்கு முதல் சண்டை வந்தது’ என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.
